book

கிராமத்துக் கதைப் பாடல்

Gramathu Kathai Paadal

₹45+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :நா. சந்திரன்
பதிப்பகம் :அறிவுப் பதிப்பகம்
Publisher :Arivu pathippagam
புத்தக வகை :இலக்கியம்
பக்கங்கள் :87
பதிப்பு :1
Published on :2008
ISBN :9788188048854
குறிச்சொற்கள் :பழங்கதைகள், சிந்தனைக்கதைகள், நாட்டுப்புறப் பாடல்
Add to Cart

நாட்டுப்புற இலக்கியங்களை எழுதா இலக்கியம் என்பர். பண்டைக்காலத்தில் கிராம்ப்புறங்களில் வாழ்ந்த மக்கள் தம் பண்பாடு, தொழில், நாகரிகம், பழக்கவழக்கங்கள், உறவுமுறை, பொழுதுபோக்கு, விழாக்கள், திருமணமுறை பொன்றவற்றில் சில நியதிகளைக் கடைப்பிடித்து வந்துள்ளனர். அவற்றைப் பாடல்கள். கதைகளில் இயல்பாக வெளிப்படுத்தவர். இவ்வாறு தொன்றுதொட்டுப் பாடப்பட்டு வந்த கதைப் பாடல்களையும் சொல்லப்பட்டுவந்த கதைகளையும் அவ்வக் குடும்பங்களைச் சார்ந்த இளைஞர்கள் கேட்டறிந்து தம் மனமாகிய ஏட்டிலே பதிவு செய்துகொள்வர். இவ்வாறு வெளிப்படுத்துவதே எழுதா இலக்கயமாகும்.

 நாட்டுப்புறப் பாடல்களையும், கதைகளையும் நூல் வடிவாகக் கொணர்வதால் பண்டைக்கால மக்களின் வாழ்க்கை நிலையைப் பிற்காலத்தவர் அறிந்துகொள்ள ஏதுவாகும் என்ற நோக்கோடு இலக்கிய ஆர்வலர்கள் குறிப்பிட்ட ஊர்களுக்குச் சென்று அரிய முயற்சி மேற்கொண்டு பாடல்களையும், கதைகளையும் திரட்டி வருவர்.

 திருப்பூர், சிக்கண்ணா அரசு கல்லூரித் தமிழ்த்துறைத் தலைவர் உயர்திரு. ந. சந்திரன் அவர் விருதுநகர் மாவட்ட இராசபாளையம் வட்டம் வாழ் தேவேந்திரகுல வேளாளர் குடிமக்களின் வாழ்க்கை முறைகளை வெளிப்படுத்தும் கதை, பாடல்களைத் திரட்டுவதற்காகத் தம் நண்பருடன் அங்குச் சென்று விடா முயற்சியாலும் ஊக்க மிகுதியாலும் இன்னல்கள் பல ஏற்றும் அங்கிருந்து கொணர்ந்த கலைச் செல்வங்களை முறைப்படுத்தி ' கிராமத்துக் கதைப்பாடல்' - காலாடி' என்ற கதை நூலாகப் படைத்துள்ளார்.