book

குண்டலினி தவம்

Gundalini Thavam

₹110+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :பி.ஆர். தாமஸ்
பதிப்பகம் :சங்கர் பதிப்பகம்
Publisher :Sankar Pathippagam
புத்தக வகை :யோகா
பக்கங்கள் :152
பதிப்பு :1
Published on :2014
Add to Cart

குண்டலினி தவம் என்றால் அங்கே சரத்தை அதாவது மூச்சைக் கட்டுப்படுத்த வேண்டியது அவசியம். பொதுவாக நாம் சித்த மருத்துவத்தில் போய் வைத்தியம் பார்க்கப் போனால், முதலில் பேதி மருந்தைக் கொடுத்து வயிற்றைச் சுத்தம் செய்து விட்டு பிறகு மருந்தை உட்கொள்ளச் சொல்வார்கள். பேதியாகும் போது குடல் மட்டுமல்ல இரத்தத்தமும் சுத்தமாகும். அப்போது மருந்து உட்கொள்ளும் போது அது எளிதில் செயல்பட்டு தடையில்லாமல் உடலில் செயல்படத் துவங்கும். அது போல ப்ராணாயாமம் என்றால் நாடி சுத்தி செய்யச் சொல்வார்கள். ஏனென்றால் உடலை தயார்படுத்த முதலில் நாடிகளைச் சுத்தம் செய்து கொள்ள வேண்டியது அத்தியாவசமாகும். நாடி சுத்தியை சரியாகச் செய்து வரும் போது நம் உடலின் கண் வாத, பித்த, கப நாடிகள் முறையாக இயங்கும். இதனால் நாடிகளிலும், உடலிலும் உள்ள அசுத்தங்கள் வெளியேற்றப்படும். இந்நிலையில் ப்ராணாயாமம் மற்றும் தவம் செய்யும் போது சுழுமுனையில் குண்டலியின் அசைவை உணரலாம். விடாமுயற்சியுடன் நாடி சுத்தி, ப்ராணாயாமம், தவம் செய்து வருபவர்களுக்கு சுழுமுனை திறந்து குண்டலினி எழும்ப பதினான்கு ஆண்டுகள் ஆகும் என்று சொல்ப்பட்டுள்ளது