book

அறிவை வளர்க்கும் நீதிக்கதைகள்

arivai Valarkkum Neethikathaigal

₹50+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :பசுமைக்குமார்
பதிப்பகம் :அறிவுப் பதிப்பகம்
Publisher :Arivu pathippagam
புத்தக வகை :சிறுவர்களுக்காக
பக்கங்கள் :108
பதிப்பு :1
Published on :2008
ISBN :9788188048656
குறிச்சொற்கள் :சிந்தனைக்கதைகள், பழங்கதைகள், சிறுவர்கதைகள்
Out of Stock
Add to Alert List

அறிவை வளர்க்கும் நீதிக்கதைகள் என்னும் இந்நூல் குழ்ந்தைகளின் அறிவாற்றலைக் கூர்மை செய்யும். சமயோசிதத் திறனை வளர்க்கும், நன்னெறிகளை நேசிக்கச் செய்யும் என்று நம்புகிறேன்.

எந்திரமயமான வாழ்க்கைச் சுழலில் சிக்கிக் கொண்ட அன்னை-தந்தையர்கள் தங்கள் குழந்தைகளுக்குக் கதை சொல்ல நேரம் ஒதுக்குவதும் இல்லை. கதை கேட்பது குழந்தைகளின் உரிமை; கதை சொல்லுவது பெற்றோர் கடமை என்பதை உணர்வதும் இல்லை.

 பணி முடித்து வீடு திரும்பும் பெற்றோருக்கு எரிச்சலே மிகுந்திருக்கும் நிலையில், தொலைக்காட்சி உலகத்துக்குள் நுழைய விரும்பும் நிலையில் வீட்டு வேலைகளின் நெருக்குதலில் சிக்கி நசுங்கும் நிலையில், தம் குழ்ந்தைகளை இயன்றவரை தூங்க வைக்கவே பெற்றோர் கற்று வைத்துள்ளனர்.

 நல்ல கதைகளைத் தெரிந்து வைத்திருக்கும் பழக்கம் போய்விட்டதால், பெற்றோர்களுக்குக் கதை சொல்வதில் தடுமாற்றம் வந்து விடுகிறது.