book

தெக்கத்தி ஆத்மாக்கள்

Thekkathi Aathmaakkal

₹60+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :பா. செயப்பிரகாசம்
பதிப்பகம் :விகடன் பிரசுரம்
Publisher :Vikatan Prasuram
புத்தக வகை :கதைகள்
பக்கங்கள் :160
பதிப்பு :1
Published on :2007
ISBN :9788189936020
குறிச்சொற்கள் :கிராமம், நிஜம், பழங்கதைகள், சிந்தனைக்கதைகள், நினைவுங்கள்
Add to Cart

வாழ்க்கையின் அனுபவக்காரர்கள் கிராமத்தில் பிறந்தவர்கள். ஒவ்வொரு கிராமமும் ஆரோக்கியம் நிரம்பி வழியும் பசுஞ்சோலைதான். மாசற்ற காற்று, பருவம் தப்பாமல் பெய்யும் மழை, இளம் வெயில், சுத்தமான தண்ணீர், கொடை அள்ளித்தரும் காடு, மலை என்று ஊர்ப் புறத்தின் சுற்றுமுற்றும் இயற்கை வளங்கொண்டு இருக்கும்.
அங்கு வாழும் மனிதர்களெல்லாம் இயற்கையின் தீண்டலை சுகிப்பவர்கள். அவர்கள் எந்தவித பாசாங்கும் அற்று, உண்மைக்குப் பெயர் போனவர்கள். இன்றுவரை தமிழ்ப் பண்பாட்டை, அதன் கலாசாரத்தை உயர்த்திப் பிடிக்கும் கலங்கரை விளக்கமாக கிராமத்து மாந்தர்களே விளங்கி வந்திருக்கிறார்கள்.

அப்படிப்பட்ட ஆத்மாக்களைப் பேசுவதுதான் எழுத்தாளர் பா.செயப்பிரகாசம் எழுதிய இந்த 'தெக்கத்தி ஆத்மாக்கள்'.கரிசல் காட்டு மக்களைப் பற்றிய இந்தக் கட்டுரைகள், முண்டியடித்துச் செல்லும் நகர வாழ்க்கைக்கு அப்பாலுள்ள சம்சாரிகளையும் அவர்களின் வாழ்நிலை அற்றுப்போகிற சூழலையும் படம்பிடித்துக் காட்டுபவை.

1999ம் ஆண்டு வாக்கில் ஜூனியர் விகடன் இதழில் இது தொடராக வந்தபோது, வாழ்வைத் தேடி கிராமத்திலிருந்து நகரத்துக்கு குடிபுகுந்தவர்கள் மத்தியிலும், கிராமத்திலேயே வாழ்பவர்களிடத்திலும் மெத்தப் பாராட்டைப் பெற்றது. குறிப்பாக கரிசல் சீமைக்காரர்களிடத்தில்.

இந்நூலிலுள்ள ஒவ்வொரு கட்டுரையும் ஒவ்வொரு கிராமத்தைப் பிரதிபலிக்கிறது. மண்ணின், அதன் மக்களின் இந்தக் கதைகள் கண்ணீரும் வடிக்கின்றன. அப்படிச் சொட்டிய ஒவ்வொரு துளியிலும் ஆயிரமாயிரம் மனிதர்களைக் காணமுடிகிறது.

நிழல் பார்த்து மணி சொல்கிற அனுபவஸ்தர்களின் இந்தக் கதைகள், குடிக்கக்குடிக்கச் சுவை கூடும் சுனை நீரைப்போல் படிக்கப்படிக்க மனம் லயிக்கச் செய்யும் ஞாபகச்சுனையின் பெருங்கதைகள்.