book

சோஷலிச யதார்த்த வாதம் பற்றி ஜீவா

Socialisa Yathaartha Vaatham Patri Jeeva

₹50+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ஜீவா
பதிப்பகம் :பாவை பப்ளிகேஷன்ஸ்
Publisher :Paavai Publications
புத்தக வகை :பொது
பக்கங்கள் :102
பதிப்பு :1
Published on :2007
ISBN :9788177353174
குறிச்சொற்கள் :சரித்திரம், போராட்டம், தலைவர்கள், முயற்சி, எழுச்சி
Out of Stock
Add to Alert List

இந்தக் கட்டுரைத் தொகுப்பை ஆக்கிய தோழர் ஜீவா ( 1907 - 1963 ) அவர்கள் ஒரு மாமனிதர். நாட்டின் விடுதலைப் போராட்டத்தில் தீவிரப் பங்கு கொண்டு பலமுறை சிறை சென்றவர். தொழிலாளர், விவசாயிகள் மற்றும் பிற பாட்டாளி மக்களின் போராட்டங்களுக்கு தலைமை தாங்கி நடத்தியதோடு அவர்களை விடுதலைப் போராட்டத்திற்கு ஈர்த்தவர். மேதை லெனின் தலைமையில் நடந்த மகத்தான அக்டோபர் புரட்சி ஏற்படுத்திய தாக்கத்தின் விளைவாக மார்க்சிய - லெனினிய கோட்பாடுகளில் ஈடுபாடு கொண்டவர். தமிழகத்தில் கம்யூனிஸ்ண் கட்சியின் முன்னணித் தலைவர்களில் ஒருவராக விளங்கினார். சுயமரியாதை இயக்கத்தின் மீது தமது தாக்கத்தை ஏற்படுத்தினார்.