book

லக்ஷ்மி

Lakshmi

₹200+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :அநுத்தமா
பதிப்பகம் :கலா நிலையம்
Publisher :Kala Nilayam
புத்தக வகை :நாவல்
பக்கங்கள் :452
பதிப்பு :1
Published on :2010
Out of Stock
Add to Alert List

"லக்ஷ்மி" என்ற இந்த நாவலைப் படித்து முடித்த வுடன் எனக்கு ஒருமுறை பரமபத சோபான படத்தை வைத்துக்கொண்டு கடைசியில் பரமபதத்தில் ஏறி ஒரு கவலையும் இல்லாமல் வெற்றி பெற்றது போன்ற இன்பம் உண்டாயிற்று. சிலப்பதிகாரத்தைப் பற்றிச் சொல் வார்கள்; அதில் கதாநாயகிதான் உண்டு; கதாநாயகன் இல்லை. என்பார்கள். அதுபோலவே இந்த நாவல் முழுவதும் லக்ஷ்மிதான் காட்சி தருகிறாள். டாக்டர் சீனு பேருக்குத்தான் கதாநாயகனாகக் கடைசியில் வருகிறான். ஆனால் கதை முழுவதும் லக்ஷ்மியே பல பாத்திரங்களி னிடையே உலவுகிறாள்; மகிழ்கிறாள்; மகிழ்விக்கிறாள்; துன்புறுகிறாள்; துணிவு கொள்கிறாள். விளக்கினால் தம்முடைய உருவங்களைக் காட்டும் பாத் திரங்கள் பல பல இந்நாவலில் வருகின்றன.