book

நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ்

Nethaji Subash Chandrabose

₹140+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :பட்டத்தி மைந்தன்
பதிப்பகம் :ராமையா பதிப்பகம்
Publisher :Ramaiya Pathippagam
புத்தக வகை :வாழ்க்கை வரலாறு
பக்கங்கள் :152
பதிப்பு :6
Published on :2013
Add to Cart

ஒடிஸா மாநிலம் கட்டாக்கில் பிறந்த நேதாஜி பாப்டிஸ்ட் மிஷன் பள்ளியில் ஆரம்பக் கல்வியும் கொல்கத்தா பிரசிடென்சி கல்லூரி மற்றும் ஸ்காட்டிஷ் சர்ச் கல்லூரியிலும் படித்தார். கல்லூரியில் படிப்பு என்ற புத்தகப்புழுவாக மட்டும் அல்லாமல் மாணவர்களுக்கான படைப்பயிற்சியில் கலந்து கொண்டு சிறந்த மாணவனாக தேறினார். ஐசிஎஸ் தேர்வில் வெற்றியடைந்தார் நேதாஜி. ஆனால் ஆங்கிலேயருக்கு மண்டியிட்டு செய்யக்கூடிய வேலையை என்னால் செய்ய முடியாது என்று சீறிய நேதாஜி அந்த வேலையை தூக்கிவீசினார். ஒரு மதிப்புமிக்க வேலையை தூக்கி எறிகிறாயே? உன் பெற்றோர்கள் இதை நினைத்து வருந்துவார்களே என்று கேட்டார் ஒரு அதிகாரி. அதற்கு பதிலளித்த நேதாஜி, ஆமாம் என் தாய் தந்தைக்கு வருத்தமாகத்தான் இருக்கும். ஆனால் என் தாய்நாட்டின் வருத்தம் அதை விடப் பெரியது என்றுக்கூறி சுதந்திர போராட்டத்தில் தன் காலடியை பதித்தார் நேதாஜி.நேதாஜியின் வேட்கையை கல்லூரியிலேயே கண்ட சி. ஆர். தாஸ், நேதாஜிக்கு தன்னுடைய தேசியக் கல்லூரியின் தலைவர் பொறுப்பை கொடுத்தார். அப்போது நேதாஜிக்கு வயது 25. பற்ற ஏங்கி நிற்கும் மாணவர்களுக்கு இடையே நெருப்பு பொறியாய் விழுந்தார் சுபாஷ் சந்திர போஸ். வார்த்தைகளில் உற்சாகம், ஒவ்வொரு பேச்சிலும் கக்கிய அனல் மாணவர்களை உத்வேகப்படுத்தியது. நேதாஜியின் பெயர் மெல்ல மெல்ல பரவ தொடங்கியது.