book

வில்லாதி வில்லன்

Villathi Villan

₹225+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :பாலா ஜெயராமன்
பதிப்பகம் :கிழக்கு பதிப்பகம்
Publisher :Kizhakku Pathippagam
புத்தக வகை :அரசியல்
பக்கங்கள் :208
பதிப்பு :1
Published on :2011
ISBN :9788184935141
Out of Stock
Add to Alert List

வில்லன் என்றதும் ஹிட்லர் மற்றும் முசோலினியின் பிம்பங்கள் உடனடியாக நம் நினைவுக்கு வருவதற்குக் காரணம், லட்சக்கணக்கானவர்களின் மரணத்துக்கு அவர்கள் நேரடிக் காரணம் என்பதால். ஆனால், இவர்களைக் காட்டிலும் குரூரமான பலரை வரலாறு கண்டிருக்கிறது.

மறக்கமுடியாத கொடூரங்களையும், படுகொலைகளையும், ஆகப் பெரும் அழிவுகளையும்... மக்களின் பெயரால், நாட்டின் பெயரால், மதத்தின் பெயரால், இனத்தின் பெயரால், கொள்கையின் பெயரால் இவர்கள் நிகழ்த்திக்காட்டியிருக்கிறார்கள். அந்த வகையில், தேசியவாதிகளாகவும் தேச நாயகர்களாகவும்கூட இவர்கள் கொண்டாடப்படுகிறார்கள்.

உதாரணத்துக்கு, பேரரசராகவும் ரத்த வெறியராகவும் திகழ்ந்த செங்கிஸ்கான். இந்தியாவின் நீரோ மன்னரான லிட்டன் பிரபு. ஜப்பானை இரண்டாம் உலகப் போரில் ஈடுபடுத்திய ஹிடேக்கி டோஜோ. மாயன் நாகரிகத்தின் பண்பாட்டை அழித்த ஸ்பானிய மதகுரு, டியாகோ டி லாண்டா. திசைமாறிய புரட்சியாளர் ரோபெஸ்பியர். வடகொரியாவின் கொடூர முகமான கிம் இல் சங். கம்போடியாவின் பால்பாட். பாகிஸ்தானின் ஜியா உல் ஹக் மற்றும் பலர்.

தமிழ்பேப்பர் டாட் நெட் இணையத்தளத்தில் வெளிவந்து, பெரும் வரவேற்பைப் பெற்ற தொடரின் நூல் வடிவம் இது. வரலாற்றைக் கருப்புப் பக்கங்களால் நிரப்பிய?முக்கிய வில்லன்களின் சிந்தனைகளையும் செயல்பாடுகளையும் விவரிக்கும் அவசியமான பதிவும்கூட.