book

கதை வாங்கலையோ கதை

Kathai Vaangalaiyo kathai

₹25+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :வி. ஜலஜா சக்திதாசன்
பதிப்பகம் :தாமரை பப்ளிகேஷன்ஸ் (பி) லிட்
Publisher :Tamarai publications (p) ltd
புத்தக வகை :கதைகள்
பக்கங்கள் :32
பதிப்பு :1
Published on :2008
Out of Stock
Add to Alert List

'' இயற்கையே நல்லது செய்வாய்'' என்ற கதையில் இயற்கை நமக்கு எப்பொதும் நன்மையே செய்யும் என்றும் அது தீமை செய்வது போல இருந்தாலும் தீமையிலும் நன்மை இருக்கும் என்ற அரிய கருத்து வலியுறுத்தப்பட்டுள்ளது. அதுமட்டுமல்ல இயற்கை மனிதனுக்கு நன்மை செய்கிறது. மனிதன்தான் இயற்கைக்குத் தொல்லை தருகிறான் எனவும் சிந்திக்க வைக்கிறது. '' உயர்ந்தவன் யார்?'' என்ற கதை அரசனின் வேலைக்கார சிறுமியைக் கண்டு கர்ஜித்த அரசன் 50 கசையடிகள் தரும்படி ஆணையிடுகிறான். சிறுமியோ தைரியமாக அரசனைப் பார்த்து, அறியாத - சிறுமி ஐந்து நிமிடம் படுத்து உறங்கியதற்கு 50 கசையடிகள் என்றால் பன்னனிரண்டு மணிநேரம் ஆயுள் முழுவதும் இந்த மெத்தையில் தூங்கிக்கொண்டிருப்பவருக்கு என்ன தண்டனை? என்று கேட்டு சிரிக்கிறாள். அது அரசனின் சிந்தையை ஆழமான தாக்கத்தை ஏற்படுத்துகிறது. அந்தத் தாக்கம் அரசனுக்கு மட்டும் அல்ல, நமக்குதான்! '' நேர்வழி '' என்ற கதையில் சாலையில் ஓரத் தொழிலாளியின் அறிவுக் கூர்மையை மெச்சி அவனை தனக்கு ஆலோசகராக வைத்துக்கொண்ட அமைச்சர், அவனது ஆலோசனையால் புகழ் பெறுகிறார். அமைச்சர் புத்திசாலி ஆனது எப்படி என மக்கள் அறிந்துகொள்வதால். ஆலோசகரைத் தீர்த்துக் கட்டத் திட்டமிடுகிறார். அமைச்சர் தன்வினை தன்னைச் சுடும் என்பார்கள். இந்தச் சூழ்ச்சிக்குப் பலியானது ஆலோசகர் அல்ல.அமைச்சன் மகன்! குறுக்குவழி இழப்பை ஏற்படுத்தியதை அமைச்சர் உணர்ந்து கொள்கிறார்! '' மந்திரப்பெட்டி '' என்ற கதை சுவையான கதை. ஏழையின் புத்திசாலித்தனம் அவனை ராஜ சபையில் அறிஞர் என்ற தகுதியை பெறச் செய்கிறது. ஒரு மந்திரப் பெட்டியின் காரணமாகத் தான் அவர் அறிஞராக இருக்கமுடிகிறது என்று பல்வேறு வதந்திகளை அறிஞரின் எதிரிகள் பரப்புகின்றனர்.