book

கிருஷ்ண விஜயம் (பாகம் 2)

Krishna vijayam(part 2)

₹110+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :கவிஞர் வாலி
பதிப்பகம் :விகடன் பிரசுரம்
Publisher :Vikatan Prasuram
புத்தக வகை :ஆன்மீகம்
பக்கங்கள் :395
பதிப்பு :1
Published on :2006
ISBN :9788189780340
குறிச்சொற்கள் :தெய்வம், கடவுள், கோயில்கள், வழிப்பாடு, பொக்கிஷம், புராணம் , பழங்கதைகள், பிரார்த்தனைகள்
Out of Stock
Add to Alert List

'கிருஷ்ண விஜயம்' முதல் பாகத்தை நிறைவு செய்துவிட்டு, நீங்கள் ஆவலுடன் கண்கள் விரிய குதூகலிப்பதை உணர்கிறோம்.
தேவகியின் மகனாக அவதரித்த கிருஷ்ணன், யசோதையின் மகனாக வளர்தல்; குழந்தையாக இருக்கும்போது மண் தின்று தன் திருவாயில் பிரபஞ்சத்தைக் காட்டி வியப்பில் ஆழ்த்துதல்; விளையாட்டுப் பிள்ளையாய் கூட்டாளிகளுடன் வெண்ணெய் திருடுதல்; பருவவயது ராசலீலைகளில் யமுனை ஆற்றில் குளிக்கும் கன்னியர்களின் துணிகளைத் திருடி குறும்பு செய்து ரசித்தல்; கம்சனை அழிக்க எண்ணிய கிருஷ்ண பகவான், ஆயர்பாடிக்கு கண்ணனாக விஜயம் செய்தல்...இவற்றையெல்லாம் முதல் பாகத்தில் ரசித்த உங்கள் கரங்களில் இதோ இரண்டாம் பாகம்.

புராணத்தில், தீவினைகளின் மூலம் மானுடத்தை ஆட்டுவித்து திளைப்பவர்கள் அசுரர்கள். அவர்களை அழித்து, மக்களைக் காத்து நன்நெறிகளைப் போதிப்பவர்கள் அவதார புருஷர்கள்.

இந்த இரண்டாம் பாகத்தில், பருவ வயதைக் கடந்து அனுபவ முதிர்ச்சியுடன் விளங்கும் கண்ணன், சூரத்தனம் செய்து துன்புறுத்திய அசுரர்களை அழிக்கிறார். நரகாசுரனை அழித்து தீபாவளி கொண்டாடுதல்; சிவனிடம் வரம் பெற்று அவரையே மாய்க்கத் துணிந்த விருகாசுரனை அழித்தல்... ஆகிய சம்பவங்களை, தன் மந்திர தமிழ்ச் சொற்களால் வர்ணித்து மயங்க வைத்திருக்கிறார் கவிஞர் வாலி. ஒவ்வொன்றும் சிந்தனையைத் தூண்டும் தேன் தமிழ்ச் சொல்!

கிருஷ்ணலீலையில் மெய் சிலிர்க்க தொடர்ந்து பயணமாகுங்கள்!