-
"நவீன இலக்கியத்தில் புதிய கதை சொல்லியாக இருக்கிறார் யுவன் சந்திர சேகர். சும்மா பம்மாத்துப் பண்ணாமல் சக பயணி போன்றே நம்முடன் பயணிக்கிறது இச் சிறுகதை தொகுப்பு. மொத்தம் 12 சிறுகதைகள். கதை, கதைகளுக்குள் கதை, அதில் மற்றொரு கதை என்று பல படிம வெரைட்டிகளைத் தந்திருக்கிறார். சுவையான வாசிப்பனுபவம் கிடைக்கிறது.
சிறுகதைத் தொகுப்பு என்றாலும் ஒவ்வொரு கதையும் சிறு இழையில் தொடர்பு கொண்டே சொல்லப்படுகிறது. அதனதன் பிணைப்பை மிக எளிதாக நமக்குள் கொண்டுவந்து விடுகிறார் கதையாசிரியர்.
உதாரணமாக ஒரு கதை: வங்கியில் தொடர்ந்து பணம் கட்டவரும் பெண்மணி, தனது கணவருக்கு இரண்டு காலும் கிடையாது, அவரை வீட்டில் வைத்து பூட்டிவிட்டு வந்திருக்கிறேன் என்று கேஷியரிடம் சொல்லி கியூவில் நிற்காமல் பணம் கட்ட அனுமதி வாங்கிவிடுகிறார். அந்த வங்கியின் கேஷியரும் பரிதாபப்பட்டு அனுமதி தந்துவிடுகிறார்.
ஒரு திருமண விருந்தில் அதே பெண்மணியை கேஷியர் பார்க்க நேரிடுகிறது. கூடவே அவரது ஆஜானுபாகுவான கணவருடன். அவர் முழு காலுடன் நல்ல அரோக்கியத்துடன் இருக்கிறார். இதைப் பார்த்ததும் கேஷியருக்கு கோபம் தலைக்கு ஏறுகிறது. அவர்கள் பார்வையில் படாமல் ஒதுங்கிக் கொள்ளும் அவர், ""சை...இந்த அம்மாள் நம்மள இப்படி ஏமாத்திட்டாளே' என்று குமைந்து போகிறார். நாளைக்கு வரட்டும் நாக்க பிடுங்கிக்கிற மாதிரி கேள்வி கேக்கிறேன்' என்று நினைத்துக் கொள்கிறார். இதை அவரது ரயில் சினேகிதரிடம் பகிர்ந்து கொள்ள, அவரோ """"அந்தப் பெண்மனியிடம் எதுவும் கேட்காதீர்கள், அவர்கள் வந்தாலும் ஒண்ணும் தெரியாத மாதிரியே சர்வீஸ் பண்ணுங்க. விஷயம் தெரியாதது மாதிரியே நடந்துக்குங்க. உங்களுக்கு விஷயம் தெரியும்ன்னு அவங்களுக்குத் தெரியாதே, இப்ப ஏமாந்தது யாரு சொல்லுங்க ...'' என்கிறார். ஏமாற்றும் கலை தெரிந்தால் மட்டுமே இவ்வுலகில் ஏமாறாமல் தப்பிக்கலாம். இப்படிப்பட்ட சுவையான சிறுகதைகளின் தொகுப்பு இந்நூல்"
-
This book Aemarum Kalai (Short Stories) is written by Yuvan Chandrasekhar and published by Kalachuvadu Pathippagam.
இந்த நூல் ஏமாறும் கலை, யுவன் சந்திரசேகர் அவர்களால் எழுதி காலச்சுவடு பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.
Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Aemarum Kalai (Short Stories), ஏமாறும் கலை, யுவன் சந்திரசேகர், Yuvan Chandrasekhar, Novel, நாவல் , Yuvan Chandrasekhar Novel,யுவன் சந்திரசேகர் நாவல்,காலச்சுவடு பதிப்பகம், Kalachuvadu Pathippagam, buy Yuvan Chandrasekhar books, buy Kalachuvadu Pathippagam books online, buy Aemarum Kalai (Short Stories) tamil book.
|