book

ABS மூலிகை தாவரவியல் அகராதி 504 வண்ணப்படங்கள் - Dictionary of Medicinal Plants

₹700
எழுத்தாளர் :டாக்டர். ஏ. பாலசுப்பிரமணியன்
பதிப்பகம் :ABS Botanical Gardens
புத்தக வகை :மருத்துவம்
பக்கங்கள் :646
பதிப்பு :3
Published on :2013
ISBN :9789351044062
Out of Stock
Add to Alert List

இந்த அகராதியின் ஆசிரியர் டாக்டர். அ. பாலசுப்ரமணியன் (ABS)  அவர்கள் தாவரங்களின் மீது அளவற்ற பற்றும் ஈடுபாடும் கொண்டவர்.  சேலம் மாவட்டத்தைச் சார்ந்த காரிப்பட்டி மற்றும் ஏற்காடு ஆகிய இடங்களில், பல அழிந்து வரும் தாவரங்கள் உள்பட 2500 க்கு மேற்பட்ட அனைத்துவகைத் அரிய தாவரங்களை வளர்த்து, பாதுகாத்து அவற்றுடன் வாழ்ந்து வருகிறார்.  பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கும், சித்த மருத்துவர்களுக்கும் வனவியலாளர்களுக்கும் தாவரவியல் வகுப்புகள் நடத்தி வருகிறார்.  தன்னிடமுள்ள தாவரங்களை பல ஆண்டுகளாக ஆய்வு செய்து சொந்தமாக மருந்துகள் தயாரித்து நோயாளிகளுக்கு வழங்கிவரும் மத்திய, மாநில அரணசுகளின் அங்கீகாரம் பெற்ற சித்த மருத்துவராக பணியாற்றி வருகிறார்.  இவர் தேசிய சித்த மருத்துவ ஆராய்ச்சி மையத்தில் கவுரவ ஆலோசகராக நியமிக்கப்பட்டு ஐந்தாண்டுகள் பணியாற்றியுள்ளார்.  தேசிய மருத்துவத் தாவரங்கள் வாரியத்தின் அரிய வகை பாதுகாப்புக்கான திட்டம் ஒன்றை வெற்றிகரமாக செயல்படுத்தி வருகிறார். 

இந்த அகராதி, தோட்டக்கலை, தாவரவியல் மாணவர்கள், வனவியலாளர்கள் ஆராய்ச்சியாளர்கள், சித்த, ஆயுர்வேத, மற்றும் யுனானி மருத்துவர்கள், ஏற்றுமதியாளர்கள் போன்ற அனைவருக்கும் பயனளிக்க வல்லது என்பதில் அய்யமில்லை.  4170 வழக்கு சொற்களை, பாரம்பரிய சொற்களுடன் சேர்த்து தமிழிலும், நவீன Botaical Names with synonyms 3300 பெயர்கள் ஆங்கிலத்திலும், 260 Families  உள்ளடக்கிய தாவரங்களையும் தனித்தனியாக பட்டியலிட்டு, திருத்தி அமைக்கப்பட்டுள்ள தாவரக் குடும்பங்களையும் வரிசைப்படுத்தி அட்டவணை வெளியிட்டுள்ளார்.

மொத்தத்தில் ஓர் எளிமையான மிக்க பயனளிக்கக் கூடிய, தினம் தினம் புரட்டிப்பார்த்து விரைவில் பொருள் அறிந்துகொள்ள ஏதுவாக உருவாக்கப்பட்ட அரிய படைப்பு - இவ்வகராதி ஓர் காலப் பொக்கிஷம்.