book

மாண்புமிகு மகான்கள் ஷீர்டி சாயிபாபா

₹200+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ஷீர்டி சாயிபாபா
பதிப்பகம் :குமுதம் புத்தகம் வெளியீடு
Publisher :kumudam puthagam velieedu
புத்தக வகை :ஆன்மீகம்
பக்கங்கள் :207
பதிப்பு :1
Published on :2012
Out of Stock
Add to Alert List

ஷிர்யில் பாலாஜி பாடீல் நெவாஸ்கர் என்ற நிழக்கிழார் இருந்தார். செல்வந்தரான இவர் பாபாவின் மிகப்பெரிய பக்தர். அவரது தினசரி கடமை என்ன தெரியுமா? சொன்னால் நம்பமாட்டீர்கள். பாபா தினமும் மசூதியிலிருந்து புறப்பட்டு, இரண்டு மூன்று தெருக்களைச் சுற்றி நடந்து வருவார் அல்லாவ? அந்தத் தெருக்களை பாபா கிளம்புவதற்கு முன்பாகச் சென்று சுத்தம் செய்யும் வேலையைப் புரிந்து வந்தார் பாலாஜி! அவரே கையில் வாறுகோலுடன் சென்று. பாபாவின் கால்களில் எதுவும் குத்திவிடக்கூடாது என்பதறகாக ஒரு தூசி துரும்பு இல்லாமல் வியர்க்க விறுவிறுக்க சுத்தம் செய்வார்! அதுமட்டுமல்ல, ஒவ்வொர் ஆண்டும் அவருக்குச் சொந்தமான நிலத்தில் விளையும் எல்லா கோதுமைகளையும் மற்ற தானியங்களையும் மூட்டை மூட்டையாகக் கொண்டு வந்து பாபாவுக்குச் சமர்ப்பித்து விடுவார். பாபா எத்தனை மூட்டைகளைத் தனக்குத் திரும்பித் தருகிறாரோ அதைமட்டும் எடுத்துக் கொண்டு. தன் குடும்பத்திற்கு வைத்துக் கொள்வார். இந்த நடைமுறை பாலாஜி உயிருடன் இருக்கும் வரை மட்டுமல்ல அவருக்கு பிறகும் அவரது மகனால் செய்யப்பட்டது.