-
விவசாயம் செய்து லாபம் பார்ப்பது இன்றைய காலகட்டத்தில் குதிரைக் கொம்பாகத்தான் இருக்கிறது. காவிரி கைவிரித்ததால், மீண்டும் பட்டினிச் சாவுக்கு ஆளாகும் சூழலில் சிக்கித் தவிக்கிறார்கள் விவசாயிகள். பயிரையே உயிராக நினைத்தவர்கள் மாற்றுக்கு வழியற்றுத் தவிக்கும் சூழலில், குறைந்த தண்ணீரில், போதுமான முதலீட்டில், குறைவான மெனக்கெடுதலில் செய்யக்கூடிய காய்கறி விவசாயம் குறித்த இந்த நூல் காலத்தே உதவும் என்பது நிச்சயம். ‘பசுமை விகடன்’ இதழில் வெளிவந்த காய்கறி சாகுபடி குறித்த கட்டுரைகளைத் தொகுத்து, இன்றைய நிலவரங்களுக்கு ஏற்றபடியான விவரங்களைக் கூடுதலாகச் சேர்த்து, எல்லோருக்கும் வழிகாட்டும் விதத்தில் இந்த நூல் உருவாக்கப்பட்டு இருக்கிறது. பந்தல் இல்லாமலே பாகற்காய், நம்பிக்கை தரும் நாட்டுக் கத்திரி, பிரமிக்க வைக்கும் பீர்க்கன்காய், பளபளக்கும் பாலியஸ்டர் மிளகாய், வெற்றிக்கு வழிகாட்டும் வெள்ளரி என பலவிதமான காய்கறி சாகுபடிகளை விரிவாக விளக்குகிறது இந்த நூல். கூடவே, சாகுபடியை மேம்படுத்துவதற்கான யோசனைகளையும், உரிய உரத் தயாரிப்புகளையும் தனியே பெட்டிச் செய்திகளாக இணைத்து, எல்லோருக்கும் பயனளிக்கும் ஏற்றமிகு கட்டுரைகளாக இந்த நூலில் தொகுக்கப்பட்டு உள்ளன.நெல்லி விவசாயத்துக்கான மேம்பாட்டு யோசனைகள், முந்திரி பூமியில் முந்தும் மஞ்சள், தென்னைக்கு இடையில் அரசாணி, வறண்ட நிலத்திலும் வளம் சேர்க்கும் சீத்தா என வித்தியாசமான கட்டுரைகளுக்கும் இந்த நூலில் குறைவு இல்லை. காய்கறி சாகுபடியில் உங்களை வெற்றிகரமான விவசாயியாக இந்த நூல் நிச்சயம் மாற்றிக்காட்டும்!
-
This book Ennaalum Labam Tharum Ponnana Kaikarigal! is written by Pasumai Vikatan Team and published by Vikatan Prasuram.
இந்த நூல் எந்நாளும் லாபம் தரும் பொன்னான காய்கறிகள்!, பசுமை விகடன் டீம் அவர்களால் எழுதி விகடன் பிரசுரம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.
Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Ennaalum Labam Tharum Ponnana Kaikarigal!, எந்நாளும் லாபம் தரும் பொன்னான காய்கறிகள்!, பசுமை விகடன் டீம், Pasumai Vikatan Team, Vivasayam, விவசாயம் , Pasumai Vikatan Team Vivasayam,பசுமை விகடன் டீம் விவசாயம்,விகடன் பிரசுரம், Vikatan Prasuram, buy Pasumai Vikatan Team books, buy Vikatan Prasuram books online, buy Ennaalum Labam Tharum Ponnana Kaikarigal! tamil book.
|
நல்ல உபயோகமான புத்தகம் தெரியாதவர்களுக்கும் பயன்படும் சொட்டு நீர் பற்றியும் காய்கறி பற்றியும் தெரிந்து கொள்ளலாம் மேலும் இதை தொடர்ந்து பெறுவது எப்படி என்றும் எவ்வளவு பணம் என்றும் தெரியபடுத்தவும், அனுபவம் இல்லாதவர்கள் தெரிந்து கொள்ள உதவும் .