book

வெற்றியின் அறிவியல்

Vetriyin Ariviyal

₹100+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :சுசி. திருஞானம்
பதிப்பகம் :நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
Publisher :New century book house
புத்தக வகை :அறிவியல்
பக்கங்கள் :124
பதிப்பு :1
Published on :2007
ISBN :9788123411194
குறிச்சொற்கள் :முயற்சி, திட்டம், உழைப்பு, முன்னேற்றம், தன்னம்பிக்கை
Out of Stock
Add to Alert List

வெற்றியின் அறிவியல் ; இளைஞர்களின் உள்ளங்கள் எளிதில் இளகிவிடும். தீமை என்ற தீயில் கருகிவிடாமல் நன்மை என்ற உலையில் இளம் உள்ளங்கள் உருவாக்கப்படவேண்டும். பெற்றோர் பொறுப்பில்லாதவர்களாக இருந்தால் பிள்ளைகளிடம் ஒழுக்கச்சிதைவு ஏற்படும். நண்பர்கள் நல்லவர்களாக இல்லாவிட்டால் பழக்கவழக்கங்கள் பாழ்படும். திரையுலகம் பெரும்பாலும் இளைஞர்களைக் குறிக்கோளற்றவர்களாக மாற்றிக்  குலுக்கிக் கொண்டிருக்கிறது. முப்பது வயதுக்குட்பட்ட இளைஞர்கள்தான் அதிகமானோர் திரையரங்கம் சென்று படம் பார்க்கிறார்கள் என்று கூறி ஆடைக்குறைப்பிலும் அநாகரிக ஆட்டங்களிலும் அவர்களை ஈர்த்துக்கொள்ள முனைகிறார்கள். இதன் மூலம் ஒழுக்கச் சிதைவுகளுக்குப் தூண்டப்படுகிறார்கள். ஆபாச அச்சுப்பதிப்புகள் மற்றும் போதைப் பொருட்கள் பல பக்குவப்பட இது போன்ற நல்ல பதிப்புகள் வெளிவரவேண்டும். இளைஞர்களின் உள்ளங்களில் நல்ல எண்ணங்களை விதைத்து அவர்களை நாட்டையும் வீட்டையும் நல்லவண்ணமாக்க் காக்கின்றவர்களாக மாற்றவேண்டும். பிறருக்குப் பயன்படாத அறிவு ஊமையிடம் உள்ள உண்மை போன்றது. நூலாசிரியர் சு. சிதிருஞானம் அவர்கள்  இளைஞர்களைத் தட்டி எழுப்பி அவர்களின் சக்தியைச் சாதனையாக மாற்ற வேண்டும் என்ற துடிப்புணர்வுடன் வெற்றியின்  அறிவியல் என்னும் இந்நூலில் சுயமாக முன்னேறியவர்களின் சாதனை ரகசியங்களைத் தெளிவாகத் தந்துள்ளார். முதலில் வெற்றிக்கான தீவிர ஆசையை வளர்த்துக்கொள்ள வேண்டும்.

                                                                                                                                             - பதிப்பகத்தார்.