book

சவால் விடு சாதனைசெய்

Savaal Vidu sathanai sei

₹100+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :இராமையா I.A.S
பதிப்பகம் :நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
Publisher :New century book house
புத்தக வகை :சுய முன்னேற்றம்
பக்கங்கள் :164
பதிப்பு :1
Published on :2007
ISBN :9788123412313
குறிச்சொற்கள் :முயற்சி, திட்டம், உழைப்பு, முன்னேற்றம், தன்னம்பிக்கை
Add to Cart

சவால் விடு சாதனை செய் ; எழுத்தாளர் இராமையா ஐ.ஏ.எஸ் அவர்கள் அரசு நிர்வாகத் துறையில் அனுபவம்
பெற்றவர். தனிமனித நிர்வாகம் எப்படி இருக்க வேண்டும் என்பதை நன்கு உணர்ந்தவர். தமிழ் வளர்ச்சி -பண்பாடு
மற்றும் அறநிலையத்துறையின்  அரசுச் செயலாளராகப் பணியாற்றிவரும் இராமையா ஜ.ஏ .எஸ் அவர்கள் தமிழ்
இலக்கியங்களில் மிகுந்த ஈடுபாடு கொண்டவர். இளைஞர் உலகம் எழுச்சி பெறவேண்டும் என்ற முயற்சியில் தன்னை
ஈடுபடுத்தி 'சவால்  விடு சாதனை செய்' என்று உற்சாகம் ஊட்டி அழைக்கிறார். வாழ்க்கையை அர்த்தமுடைதாக்கக்
கற்றுத்தருகிறார்.  இந்நூலில் மனித மனம் சோர்ந்து போகாமல் தன்னம்பிக்கை பெற்றுச் சாதனை படைக்கும்
வழிமுறைகளை  எடுத்துரைக்கிறார். அண்ணல் காந்தியடிகள் , அணுவிஞ்ஞானி அப்துல்கலாம் ஆகியோரைப்
புத்தகங்கள்தான் சாதனை படைக்கத் துண்டின என்பதை எடுத்துக்காட்டி புத்தகங்கள் படித்துப் புதுவாழ்வு படைக்கத்
துண்டுகிறார். புத்தகங்கள் யார் யாருடைய வாழ்க்கையையெல்லாம் மாற்றி அமைத்தது  என்பதைப் பட்டியலிட்டு
விளக்கம் தருகிறார். அதில் அரசியல் அறிஞர்கள், அறிவியல் அறிஞர்கள், புரட்சியாளர்கள், இலக்கிய -இசைமேதைகள்
அடங்குவார்கள். மனக்கதவைத்   திறந்தால் கதாநாயகர்கள் ஆகலாம், அறிவு விளக்கை ஏற்றினால் வெளிச்சம்
பெறலாம், நம்பிக்கைத் துடுப்பைப் பிடித்தவர்கள் துயரக்கடல் அலைகளைக் கடக்கலாம். என்று விளக்கம் கூறி, கண்
வலிக்கப்  படித்தவர்கள் கால வரலாற்றை எழுதினார்கள் என்ற உண்மை கூறி இந்நூல் ஒவ்வொருவரையும் பயனுள்ள 
மனிதனாக  வாழத்தூண்டுகிறது.

                                                                                                                                         - பதிப்பகத்தார்.