book

சுட்டி மகாபாரதம்

Chuti mahabharatham

₹70+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :அரவிந்தன்
பதிப்பகம் :விகடன் பிரசுரம்
Publisher :Vikatan Prasuram
புத்தக வகை :சிறுவர்களுக்காக
பக்கங்கள் :224
பதிப்பு :1
Published on :2006
ISBN :9788189780197
குறிச்சொற்கள் :காவியம், பொக்கிஷம், பழங்கதைகள், சிந்தனைக்கதைகள், தகவல்கள்
Out of Stock
Add to Alert List

கதை கேட்கும் மரபு சிறு பிராயத்தில் பாட்டி கதை சொல்வதில் தொடங்குகிறது. அத்தகைய மரபானது குழந்தைகளின் அறிவு வளர்ச்சியை ஊக்கப்படுத்தும் என்பது நம்பிக்கை. அதற்கு புராண _ இதிகாசக் கதைகள் பெரும் துணையாக இருப்பது பெரிய கொடை என்றே சொல்லலாம். மகாபாரதம் மற்றும் ராமாயணம் ஆகிய இரு இதிகாசங்கள் சிறுசிறு கதைகளாக, பழமொழிகளாக நம் வாழ்வில் நிறைந்திருக்கின்றன.
'தர்மராஜா போல பொறுமைசாலி', 'கர்ணன் மாதிரி வள்ளல்', 'சகுனியாட்டம் வந்தான் பாரு' போன்ற சொலவடைகள் மக்களிடையே இன்றும் புழக்கத்தில் உள்ளன.

பாண்டவர்களுக்கு சொந்தமான நாட்டையும் திரௌபதியையும் அபகரிக்க கௌரவர்கள் எண்ணியதன் விளைவே பாரதப் போர். படைபலம் இருந்தும் நயவஞ்சக எண்ணம் கொண்டதால் எல்லாவற்றையும் இழந்து உயிர் துறந்தான் துரியோதனன்.

'நல்ல எண்ணங்கள் அற்ற வாழ்வு கெடுதலாகவே முடியும்!' _ இந்த நீதியை குழந்தைகளுக்கு போதிப்பதற்கு மகாபாரதக் கதை ஒரு பொக்கிஷமாக விளங்குகிறது. எண்ணற்ற பாத்திரப் படைப்புகளால் உருக்கொண்ட மகாபாரதத்தின் முழுக் கதையையும் சிறுவர் சிறுமியர் படித்து நினைவில் கொள்ள வசதியாக, சுருக்கமான கதையம்சத்தோடு அழகு தமிழில் வழங்கியிருக்கிறார் அரவிந்தன்.

கதை நிகழ்வுகள் ஆங்காங்கு காட்சி ரூபமாக விரிய அருமையான வண்ணப்படங்களை வழங்கியிருக்கிறார் ஓவியர் ஸ்யாம்.

சுட்டிகள் மட்டுமன்றி பெரியோரும் ரசித்துப் படிக்கும் வகையில் சுவை குன்றாமல் இருப்பதே இந்தப் புதிய நூலின் சிறப்பு.