book

ஒரு ஜீவ நதி

Oru Jeevandhi

₹100+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :பொன்னீலன்
பதிப்பகம் :நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
Publisher :New century book house
புத்தக வகை :இலக்கியம்
பக்கங்கள் :336
பதிப்பு :1
Published on :2003
ISBN :9788123407890
குறிச்சொற்கள் :திறனாய்வு, தொல்லியல், நாட்டுப் புறவியல், பயண இலக்கியம், வாழ்க்கை வரலாற்று
Out of Stock
Add to Alert List

ஒரு ஜீவநதி ;நாவலாசிரியராக அறியப்படும் பொன்னீலனுக்கு , இப்போதெல்லாம் வரலாற்றில் ஆர்வம்அதிகம்.பொன்னீலன், சுவாரசியமாகப் பேசுபவர் ; சுவாரசியமாகக் கதை சொல்லுபவர் ; இங்கேசுவாரசியமாக வரலாறு சொல்லுகிறார். தமிழனுக்கு வரலாற்றுணர்வு கிடையாது என்று குற்றம் கூறுவதுண்டு. எத்தனையே நிகழ்வுகள் , எத்தனையே  ஆளுமைகள் , பதிவுகளின்றி  மனித நினைவுகளில் கரைந்து மறைந்து போயிருக்கின்றன. வரலாற்றுப் பதிவுகள் என்பவை , வெறுமனே பாராட்டுப் பத்திரங்கள் அல்ல ;அவை, படிப்பினைகள் , சுய தரிசனங்களல்ல ;சுய விமர்சனங்கள்  குறிப்பாக, இலக்கிய இயக்கங்களின் வரலாறு சொல்லுதல்  என்பது, இலக்கியச் செல்நெறிகளை வளர்த்தெடுப்பது ஆகும். அது, இலக்கியங்களின் வழிப்பண்பாட்டு உருவாக்கங்களை இனம் கண்டறிவதாகும். சமூக, பண்பாட்டுப் போராளிகளின் வழிநடக்கும் தடங்களாகும். தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றத்தின் வரலாறுபற்றிப் பேசுகிறார் பொன்னீலன் . அதனை ஒரு ஜீவநதியாக உருவகித்துப் பார்க்கிறார். உண்மையில், ஒரு இயக்கம் என்பது, ஜீவன் தருவது கசிந்து ஒசிந்து வரும் ஓடைகள், சிலுசிலுத்து ஓடி வரும் சிற்றாறுகள், திடுமெனப்பெருகி வழிந்து மறைந்துபோகும்  காட்டாறுகள், கிளைத்துப் புதுவழி கண்டு போகும் கிளையாறுகள்  என்று இசைந்து பாடிப் பாய்கிறது. ஜீவநதி சரி, ஜீவநதியா ? ஜீவா நதியா ? இரண்டும் ஒன்று தான். பொன்னீலன், ஒரு பேரியக்கத்தின் தடங்களை, மனிதஉறவுகளின் பின்னணியில்  இனங்கண்டு சித்திரித்துத் தருகிறார்.

                                                                                                                                               -தி.க. நடராஜன்