book

கூண்டும் வெளியும்

Koondum Veliyum

₹80+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :சுப்ரபாரதிமணியன்
பதிப்பகம் :நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
Publisher :New century book house
புத்தக வகை :சிறுகதைகள்
பக்கங்கள் :144
பதிப்பு :1
Published on :2009
ISBN :9788123416355
குறிச்சொற்கள் :சிந்தனைக்கதைகள், பழங்கதைகள், சிறுவர்கதைகள்
Add to Cart

கூண்டும் வெளியும் ; இங்கே ஏழைகளின் வயிறுகள் காலிக்குடங்களாய் இருக்கும். அங்கே தின்னது சீரணமாக
மாத்திரைகளைத் தேடி அலையும். இதுதான் ஏற்றத்தாழ்வுகளின் வசிப்பிடம்  என்பது. திருட்டு உறவில் குழந்தை
வயிற்றில் வளர்ந்தால் அதை போகிற போக்கில் வீதியில் உருவி வீசியெறிந்துவிட்டுச் செல்லும் கல்நெஞ்சக்காரர்களும்
இருக்கத்தான் செய்கிறார்கள். இப்படி சமுதாயத்தின் விழிப்புசர்விற்காக ஒரு புறம் துண்டு பிரசுரமும் , பிரசாரமும் ,
இன்னொருபுறம் ஈவிரக்கமற்ற தீயசெயல்களும் நடந்து கொண்டுதான் இருக்கின்றன. கல்யாணம் என்னும்  கட்டத்தைத்
தாண்டிவிட்டால் ஒரு கவிஞனோ அல்லது படைப்பாளனோ தன்னுடைய முயற்சியை  கைவிட்டுவிடுவானோ என்கிற
தத்துவம் முதல்  கதையில் உரைக்கப்பட்டிருக்கிறது. கூண்டும் வெளியும் ' என்கிற சிறுகதையில் பெட்டிக்கடைக்காரன் 
கிளிகாரக் கிழவனிடம்  'உங்கிளி சிகரெட் பிடிக்குமா ? துப்பாகிக் குடுத்தா -சூட்பண்ணுமா ? என்று கேட்டுவிட்டு
'சொல்லிக் கொடு பணம் சம்பாதிக்கலாம் ' என்ற உரையாடல்களை பார்க்கும் போது ஒரு நான்கு முக்கு சந்து கடையில்
நாமும் ஒரு பழத்தை  வாங்கி உரித்து சாப்பிட்டுக் கொண்டே  இவைகளைக் கேட்டு ரசிப்பதாய் படுகிறது. தன்
அனுபவங்களைநும் எதிர்காலத்தின் மீதுள்ள எதிர்பார்ப்புகளையும் மிக தெளிவாக தொகுத்து தந்திருக்கும் நூலாசிரியர்
சுப்ரபாரதிமணியன்  அவர்களுக்கு நன்றிகூற கடமைப்பட்டிருக்கிறது எங்கள்  நிறுவனம்.
                                                                                                                                                       - பதிப்பகத்தார்.