book

ஶ்ரீ வைஷ்ணவம் என்சைக்ளோபீடியா

Sri. Vaishnavam

₹400+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :வேணு சீனுவாசன்
பதிப்பகம் :கிழக்கு பதிப்பகம்
Publisher :Kizhakku Pathippagam
புத்தக வகை :ஆன்மீகம்
பக்கங்கள் :360
பதிப்பு :1
Published on :2012
ISBN :9788184934250
Out of Stock
Add to Alert List

"ஸ்ரீ வைஷ்ணவம் என்பது ஏதோ ஒரு இனத்தாருக்கு மாத்திரமே உரியதாக எண்ணப்படுகிறது. அது அப்படியில்லை. எல்லோருமே ஸ்ரீ வைஷ்ணவனாகப் பிறப்பதில்லை என்பது உண்மைதான். ஆனால் இவ்வுலகில் பிறந்த அத்தனை ஜீவன்களும் ஸ்ரீ வைஷ்ணவன் ஆகலாம் என சிவப்புக் கம்பளம் விரிக்கும் மதம் ஸ்ரீ வைஷ்ணவம். வேதகாலத்தில் இருந்து வைஷ்ணவம் தோன்றியது. தமிழ் இலக்கியங்கள் அதனைப் போற்றியது, வாழ்க்கையோடு வைஷ்ணவம் எப்படியெல்லாம் கலந்துள்ளது என்பது தொடங்கி, அதன் தத்துவங்கள், சித்தாந்தங்கள், பெருமாளின் கல்யாண குணங்கள், சரணாகதி தத்துவம், வடகலை தென்கலை வித்தியாசங்கள் ராமானுஜர் ஏற்படுத்திய மாற்றங்கள் என சகலமும் இந்நூலில் விவரிக்கப்பட்டுள்ளது. கூடவே வைஷ்ணவத்தை முன்னெடுத்துச் சென்ற ஆழ்வார்கள், அவர்களுக்குப் பின் வைணவத்தை வளர்த்த ஆச்சாரியார்களைப் பற்றியும் சிலிர்ப்பூட்டும் நடையில் அழகு தமிழில் எழுதியுள்ள இந்நூலாசிரியர் கல்பாக்கம் அணுவாற்றல் மருத்துவமனையில் பணியாற்றுபவர். பக்தி இலக்கியம் தவிர குழந்தை இலக்கியத்திலும் பல பரிசுகளைப் பெற்றவர். பிரமிப்பூட்டும் தகவல்கள் கொண்ட இந்த ஸ்ரீ வைஷ்ணவம் உங்களை வசப்படுத்துவது நிச்சயம்."