-
தமிழ் மொழி, நிலநூல் வானநூல் போலும் நூல்களைப் பெரு அளவில் பெறவில்லை என்பது உண்மையே. ஆனால், பண்பாடுணர்த்தும் இலக்கிய நூல்களைப் பெறுவதில், அஃது எம் மொழிக்கும் பின் தங்கிவிடவில்லை. தமிழ் இலக்கிய நூல்கள் உயர்ந்த பண்பாடுணர்த்தும் இயல்புடைமையால் மட்டும் சிறந்தன என்பதில்லை. எண்ணிக்கையாலும் அது சிறந்ததாம்; தமிழ் இலக்கியம் கரை காணாப் பெருங்கடலுக்கு ஒப்பாம்.
தமிழ் நாட்டு மன்னர்களும், அறிஞர்களும் தமிழ் இலக்கியச் செல்வத்தைச் சங்கம் அமைத்து வளர்த்தனர். கடலால் கொள்ளப்பட்ட மதுரையிலும், கபாடபுரத்திலும், மதுரையிலும் முறையே, முதல், இடை, கடைச் சங்கங்களை அமைத்துத் தமிழ் இலக்கியங்களை ஆராய்ந்து, அழகுடையவாக்கி வளர்த்தார்கள். அகத்தியனார், இறையனார், முருகவேள், முரஞ்சியூர் முடிநாகராயர், நிதியின் கிழவன் முதலாம் புலவர் ஐந்நூற்று நாற்பத்தொன் பதின்மர் முதற் சங்கத்தில் இருந்தனரெனக் கூறுவர். அகத்தியனார், தொல்காப்பியனார், இருந்தையூர்க் கருங்கோழி, மோசி, வெள்ளூர்க் காப்பியன், சிறு பாண்டரங்கன், திரையன், மாறன், துவரைக் கோமான், கீரந்தை முதலாம் புலவர் ஐம்பத்தொன்பதின்மர் இடைச் சங்கத்தில் விளங்கினர் என்பர். சிறு மேதாவியர், சேந்தம், பூதனார், அறிவுடையரனார், பெருங் குன்றுார்க் கிழார், இளந்திருமாறன், நல்லந்துவனார், மருதன் இளநாகனார், நக்கீரனார் முதலாம் புலவர் நாற்பத்தொன்பதின்மர் கடைச் சங்கத்திலிருந்து தமிழ் வளர்த்தனர் என்பர்.
காய்சினவழுதி முதலாகக் கடுங்கோன் ஈறாகவுள்ள அரசர் எண்பத்தொன்பதின்மர் தலைச் சங்கப் புலவர்களையும், வெண்டேர்ச்செழியன் முதலாக முடத்திருமாறன் ஈறாகவுள்ள அரசர் ஐம்பத்தொன்பதின்மர் இடைச் சங்கப் புலவர்களையும், முடத்திருமாறன் முதலாக, உக்கிரப் பெருவழுதி ஈறாக உள்ள அரசர் நாற்பத்தொன்பதின்மர் கடைச் சங்கப் புலவர்களையும், உணவும், உடையும், உறையுளும் அளித்துப் பேணி, அவர்கள் இலக்கியம் வளர்க்க அருந்துணை புரிந்தனர்.
-
இந்த நூல் தமிழ் நூல்களின் புலவர்களின் கால ஆராய்ச்சி, டாக்டர்.மா. இராசமாணிக்கனார் அவர்களால் எழுதி பாவை பப்ளிகேஷன்ஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.
Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , தமிழ் நூல்களின் புலவர்களின் கால ஆராய்ச்சி, டாக்டர்.மா. இராசமாணிக்கனார், Dr. Ma. Rasamanikkanar, Pothu, பொது , Dr. Ma. Rasamanikkanar Pothu,டாக்டர்.மா. இராசமாணிக்கனார் பொது,பாவை பப்ளிகேஷன்ஸ், Paavai Publications, buy Dr. Ma. Rasamanikkanar books, buy Paavai Publications books online, buy tamil book.
|