book

தமிழகத்தில் மணல் கொள்ளை

₹60+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :எஸ். அருணாசலம்
பதிப்பகம் :பாவை பப்ளிகேஷன்ஸ்
Publisher :Paavai Publications
புத்தக வகை :பொது
பக்கங்கள் :118
பதிப்பு :1
Published on :2011
Add to Cart

மணலைப்பற்றி நாம் என்றாவது தீவிரமாக சிந்தித்தது உண்டா? உண்டு. கட்டுமானப் பணிகளுக்கு மணல் கிடைக்காவிட்டால் அல்லது, மணல் விலை தாறுமாறாக உயர்ந்தபோது மட்டும்தான். மற்றபடி தேவைக்கு மணல் கிடைத்தால், அதைப்பற்றி நாம் கவலைகொள்வது இல்லை.


'கிணறு வற்றினால்தான், நீரின் அருமை புரியும்’ என கிராமங்களில் ஒரு சொலவடை உண்டு. மணல் விஷயத்திலும் அதுதான் நடக்கிறது. தமிழகமே மணல் பற்றாக்குறையால் தவிக்கும் தற்போதைய நிலையில்தான், மணலைப்பற்றி நாம் லேசாக கவலைகொள்ளத் தொடங்கி இருக்கிறோம். அதுவும் மணல் கிடைக்கவில்லையே என்ற கவலை மட்டும்தான். ஆற்று வளம்தான் நாட்டின் வளம் என்பார்கள். அந்த ஆற்றுக்கு மிக இன்றியமையதாது ஆற்றில் இருக்கும் மணல்தான். ஆனால், அந்த மணல் பற்றி நமக்கு என்ன தெரியும்?

மணல் எனும் பொக்கிஷம்!

சர்வ சாதாரணமாக நாம் பயன்படுத்தும் மணலின் மதிப்பை இன்னும் நாம் தெரிந்துகொள்ளவில்லை என்பதுதான் உண்மை. மணல் என்பது நாம் உருவாக்கவே முடியாத ஒரு பொக்கிஷம். இயற்கையாக உருவானாலும், சில மாதங்களில் அல்லது வருடங்களில் உருவாகிடும் பொருள் அல்ல. ஒரு கன அடி மணல் உருவாக, குறைந்தபட்சம் 100 வருடத்துக்கு மேல் ஆகும்.

பருவகால வேறுபாடு காரணமாக குளிர்காலங்களில் இறுக்கமாகவும், வெயில் காலத்தில் விரிவடைந்து இலகுவாகியும் நொறுங்குகின்றன பாறைகள். இவ்வாறு நொறுங்கும் பாறைகள் மழைக்காலம் வரும்போது, மழைநீரின் வேகத்தால் உருட்டப்பட்டு, உடைந்து சிறுசிறு துகள்களாகி மணலாக மாற்றம் அடைகின்றன.