சிற்பங்களை வரலாற்றுச் சம்பவத்தையும், இதிகாசச் சுருக்கத்தையும் மையமாக வைத்துச் சிற்பிகள் வடிவத்தார்கள். மேலை நாடுகளில் புகழ்பெற்ற சிற்பி சிறிய வடிவத்தில் சிற்பத்தைச் செய்ய, அவரது சீடர்கள் அதைப் பெரிதாகக் கல்லில் வடிப்பார்கள். பளிங்கைக் காட்டிலும் சிரமம் கருங்கல்லில் சிறபங்களை வடிப்பது. கல்லில் ஓவியத்தைக் காண முடிபவர்கள் மட்டுமே சிற்பங்களைச் செதுக்க முடியும், இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு மேற்பட்ட சிற்பங்களைச் செதுக்கியவர்கள் கூட தங்கள் பெயரை எங்கேயும் பதித்து வைக்கவில்லை. அவர்கள் வடித்த சிற்பமே, அவர்கள் கையொப்பமாக இருந்தது.