-
இயற்கையாக கிடைத்த முத்திற்கும் உற்பத்தி செய்யப்பட்ட முத்துக்கும் வித்தியாசம் கண்டுபிடிக்க சில வழிகள் உள்ளன. உற்றுப்பார்த்தால் அல்லது ஒரு எக்ஸ்ரே மூலம் பார்த்தால் உள்ளே ஏதோ ஒரு உருண்டை வடிவம் இருப்பதுபோல் இருந்தால் அது செயற்கையாக பயிரிடப்பட்ட முத்து. இயற்கை முத்தில் உள்ளே நோக்கினால் வெற்றிடமாக இருக்கும். மேலும், இயற்கை முத்தின் வெளிப்புறம் கொஞ்சம் சொறசொறப்பாக இருக்கும். மசில் முத்து அல்லது செயற்கை முத்துவின் வெளிப்புறம் மிகவும் வழ வழப்பாக இருக்கும். இயற்கை முத்து எடையில் சற்று லேசாகவும் இருக்கும். ஆனால் இமிடேஷன் முத்துக்களும் எடையில் லேசாகத்தான் இருக்கும். அதனால் நல் முத்தைக் கண்டுபிடிக்க இன்னொரு வழி, முத்தைச் சற்று மெழுகுவர்த்திச் சுடரின் மீது வைக்க வேண்டும். நல் முத்தாக இருந்தால் அது பற்றிக்கொள்ளாது; உருகாது. பிளாஸ்டிக் உருகி விடுமல்லவா? அப்படி தீயில் காட்ட தயங்கினால், முத்தை சற்று பல்லில் உரசிப் பாருங்கள்; அது மிக மிருதுவாக இருந்தால் பிளாஸ்டிக். சற்று நர நரவென்று இருந்தால் உங்கள் கையில் இருப்பது சிப்பியில் அல்லது மசிலில் கிடைத்த முத்து! அதுபோல், முத்தின் ஒளிர்வைக் கணக்கிட கடையில் பல சரங்களை அருகருகில் ஒரே மாதிரியான துணியின் அல்லது பலகையின் மீது வைத்து பார்வையிடுங்கள். கடைக்காரரை ஆயிரம் கேள்விகள் கேட்கத் தயங்க வேண்டாம். சில முத்துக்கள் சுண்ணாம்பு வெண்மையுடன் ஆனால், மிளிர்வு குறைவாக இருக்கும். அதன் மேல் படும் பிம்பங்களையும் ஒளியையும் கவனியுங்கள். மங்கலாக, கலங்கியிருந்தால் அது சற்று மதிப்பு குறைந்த முத்து. முழுமையாக உருண்டையாக இருக்கும் முத்துக்கள் செயற்கை முறையில் பயிரிடப்பட்டவை. இயற்கையில் உருவாகும் முத்துக்களில் பூரணமான உருண்டை மிக அரிது. இந்தியாவில் ஹைதராபாத் நல் முத்துகள் பேர் பெற்றவை. ஆனால் கடலுக்குச் சம்பந்தமேயில்லாத நில மத்தியில் இருக்கும் இந்த ஊரில் எப்படி நல் முத்து டென்ட் போட்டு உட்கார்ந்தது?
-
இந்த நூல் முத்துக்களின் சரங்கள், டி.எஸ். கிரிபிரகாஷ் அவர்களால் எழுதி நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.
Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , முத்துக்களின் சரங்கள், டி.எஸ். கிரிபிரகாஷ், , Kavithaigal, கவிதைகள் , Kavithaigal,டி.எஸ். கிரிபிரகாஷ் கவிதைகள்,நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், New century book house, buy books, buy New century book house books online, buy tamil book.
|