book

சே குவேரா கேரளத்தில் முந்நூறு முறைக்கும் மேலாக நிகழ்த்தப்பட்ட மேடை நாடகம்

₹70+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :யூமா.வாசுகி
பதிப்பகம் :நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
Publisher :New century book house
புத்தக வகை :அரசியல்
பக்கங்கள் :152
பதிப்பு :1
Published on :2008
ISBN :9188123413851
Add to Cart

கவிஞனின் இதயமும் அநீதிக்கெதிரான மூர்க்கமும் கொண்ட மாபெரும் போராளி சே குவேராவின் வாழ்க்கை இங்கே உணர்வெழுச்சியுடைய ஒரு நாடகமாகச் சாத்தியமாகியிருக்கிறது. சே வின் வாழ்க்கைச் செறிவின் பிரதான அம்சங்களை ஒன்றிணைத்து கூர் செதுக்கி வடிக்கப்பட்ட இதன் ஒவ்வொரு பக்கங்களிலும் தர்மத்தின் ஆவேசம் கொந்தளித்துக் கிடக்கிறது. நம் மனம் மேஷம் தழல் இது. மக்கள் நேசமுடைய அனைவருக்குமான நம்பிக்கையின் முகத்துவாரம். வலி தரும்படி நம் சிந்தனையைத் துனைத்து அப்போராளியின் வாழ்க்கைச் சாரத்தைப் புகட்டுகிறது இந்த நாடகம். அவருடைய எக்காலத்திற்குமான இருப்பை உரத்து முழக்குகிறது. சே. பாடுகளின் இருட்கானகத்தில் சுமந்த கடமையின் கனலால் தானேயெரிந்து கொடுத்த வெளிச்சத்தின் கலை வடிவமென்றாகிறது. போர் நிலங்களில் சிந்திய ரத்தம் தெறித்து, குண்டுப் புகை படிந்து, லட்சியத்தின் பொருட்டு அனாயாசமாக மடிந்த வீர வாழ்க்கைகள் உறுத்தி, பொதுவுடைமைச் சிந்தனையின் கம்பீரக் கொடியசைவின் ஒளிக்கூச்சம் பட்டு, நம் கண்களில் ஈரம் சேரும். துயருற்றோரைத் தழுவும் விருப்பத்தால் நெஞ்சு விம்மும்.