book

குறிக்கோளை நிர்ணயிப்பது எப்படி?

Kurikkolai nirnayippathu eppadi?

₹125+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :விமலநாத்
பதிப்பகம் :கண்ணதாசன் பதிப்பகம்
Publisher :Kannadhasan Pathippagam
புத்தக வகை :சுய முன்னேற்றம்
பக்கங்கள் :80
பதிப்பு :11
Published on :2011
ISBN :9788184022841
Add to Cart

வாழ்வில் குறித்த கருமத்தை வெற்றிகரமாகப் பூர்த்தி செய பக்குவமான  சிந்தனை அவசியம். இதில் முதல் கட்டம் நாம் தகுந்த குறிக்கோள்களைப் பகுத்து, ஆய்ந்து எடுத்துக் கொள்கிறோமா என்று அறிந்து கொள்வது தான். அதாவது நாம் ஒரு கருமத்தைத் தெரிவு செய்யும் போது, இந்த விடயம் எமக்கு எவ்வளவு முக்கியம் என்று உணர்வது  முக்கியம். வெளியில் நாம் எவ்வாறு நடந்து கொள்ளினும், எமது மனதில் ஆழமான முக்கிய மதிப்பீடுகள் எமது அன்றாட வாழ்வில் எம்மை ஆட்கொள்கின்றன. இதை உணர்ந்து கொள்ளுதல் எமது காரியச் சித்தி, தோல்விகளிற்கு வழிவகுக்கின்றன.
நாம் தெரிவு செய்யும் காரியங்களும் எமது மனதின் அடிப்படை எண்ணங்களிற்குச் சாதகமாகும் பொழுது செய்யும் கருமம் இலகுவாகத் தென்படலாம். இதனால் செய்யும் காரியம் உண்மையில் கடினங்களை எதிர்கொள்ளினும் எமது உள் மனது உத்வேகம் (the inner drive),  குறித்த கருத்தை செய்து முடிக்க வெகுவாக உதவும். நாம் தேர்ந்து கொள்ளும் குறிக்கோள், எமது தனித்துவமான அடிப்படை மதிப்பீடுகளிற்கு மாறாக அமைந்தால் இதை ஆரம்பத்திலேயே அறிந்து கொள்ளாவிடின் பயனற்ற முயற்சியாக, செய்யும் காரியத்தை நடுவில் கைவிடும் வாய்ப்பு அதிகமாகும்.