book

நெட்வொர்க் மார்க்கெட்டிங்கின் வாழ்வின் வழி

₹150+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ஜானுஸ் ஸாஜ்னா
பதிப்பகம் :கண்ணதாசன் பதிப்பகம்
Publisher :Kannadhasan Pathippagam
புத்தக வகை :வர்த்தகம்
பக்கங்கள் :223
பதிப்பு :3
Published on :2009
குறிச்சொற்கள் :பங்கு சந்தை புத்தகம்
Out of Stock
Add to Alert List

உலகில் நாம் ஒரு பொருள் உற்பத்தி செய்யப்பட்டவுடன் உற்பத்தியாளரிடம் இருந்து நேரடியாக நியாயமான விலைக்கு வாங்கி நுகர முடியுமென்பது எவருக்கும் சாத்தியமா ? என்றால் இல்லை என்றே சொல்லலாம் . ஏன் இந்த நிலைமை ? அங்கு என்ன தான் நடக்கிறது ? என்பதற்கு பதில் ஓன்று தான் .இடைத்தரகர்களின் ஆதிக்கம் தான் காரணம் . ஒரு பொருளானது உற்பத்தியான இடத்திலிருந்து நமது கைக்கு கிடைப்பதர்க்கிடையே STOCIKIST,DISTRIBUTOR,DEALER, SUB-DEALER,RETAILER போன்ற பல்வேறு வகையான நபர்களின் கைக்கு வந்த பின்பே நமது கைக்கு வந்தடைகிறது . இவர்கள் ஒவ்வொருவரும் லாபம் வைத்து விற்பதனாலேயே நாம் கூடுதல் விலை கொடுத்து வாங்க வேண்டியிருக்கிறது .இதற்கு மாற்று வழி இருக்கின்றதா ? என்று ஆராய்ந்து பார்த்த போதுதான் நெட்வொர்க் மார்க்கெட்டிங் ( NETWORK MARKETING ) என்ற முறையை கண்டுபிடித்தனர் . இது MULTI LEVEL MARKETING ( MLM) என்றும் சொல்லப்படுகிறது .நெட்வொர்க் மார்க்கெட்டிங் - என்பது ஒரு நபர் தனக்குத் தேவையானவற்றை விருப்பத்தோடு வாங்கி நுகர்வது மட்டுமில்லாமல் அதன் பயனை பிறர்க்கு எடுத்துரைத்து அவரையும் அதன் பயனை உணரச் செய்து நுகர வைப்பதன் மூலமாக ஒரு சிறிய தொகையினை உற்பத்தியாளரிடமிருந்து அதற்குரிய ஊதியமாக ( கமிஷன் ) பெறுவதன் மூலம் ஒரு வருமானம் அடைவதாகும்.