-
பணம் சம்பாதிப்பது மட்டுமா வாழ்க்கை! ஒரு குழந்தை தன் தந்தையிடம் கேட்கிறது... குழந்தை: ‘அப்பா! நீங்க ஒரு மணி நேரத்துல எவ்வளவு ரூபாய் சம்பாதிப்பீங்க. அப்பா: இந்த மாதிரி கேள்வி எல்லாம் கேட்டு என் நேரத்தை வீணாக்காத. போயி உன் வேலை என்னவோ அதைக் கவனி. குழந்தை: தயவு செய்து சொல்லுங்க அப்பா. கண்டிப்பா நான் தெரிஞ்சுக்கணும். அப்பா: நான் ஒரு மணி நேரத்துல 500 ரூபாய் சம்பாதிப்பேன். குழந்தை: ‘ஓ...’ சரி, எனக்கு ஒரு 300 ரூபாய் கொடுங்க. அப்பா: எதுக்கு? பொம்மை, சாக்லேட்னு வாங்கி காச வீணடிக்கவா? கொடுக்க முடியாது. அடி வாங்காம தூரம் போ.குழந்தை: ப்ளீஸ் அப்பா! இந்த ஒருதடவ கொடுங்க இனி கேட்க மாட்டேன்.(குழந்தையைக் கோபமான வார்த்தைகளால் திட்டி அடித்து விடுகிறார். குழந்தையும் அழுதுகொண்டே தனது படுக்கை அறைக்குச் சென்று படுத்துக்கொள்கிறது. சிறிது நேரம் கழித்து தன் தவறை உணர்ந்து குழந்தைக்கு அருகில் வந்து அமர்கிறார் அந்தத் தந்தை). அப்பா: ஸாரி டா. உன்னை கஷ்டப்படுத்திட்டேன். இந்தா நீ கேட்ட 300 ரூபாய். (குழந்தை அந்தப் பணத்தை சந்தோஷமாக பெற்றுக்கொண்டு. தனது ஸ்கூல் பேக்குக்குள் வைத்திருந்த பணத்தை எடுக்க முயல்கிறது. இதைப் பார்த்ததும் அந்தத் தந்தைக்கு உச்சகட்ட கோபம்) அப்பா: உன்கிட்டதான் பணம் இருக்கே, எதுக்கு மறுபடியும் என்கிட்ட பணம் கேட்ட. எதுக்கு இப்ப உனக்கு இவ்வளவு பணம்? குழந்தை: இந்தாங்க அப்பா. என்கிட்ட முன்னமே 200 ரூபாய் இருந்துச்சு. இப்ப நீங்க கொடுத்த 300 ரூபாய் சேர்த்து 500 ரூபாய் இதுல இருக்கு. உங்களுடைய ஒரு மணி நேர சம்பளம். ப்ளீஸ் அப்பா. நாளைக்கு ஆபீஸ் போயிட்டு ஒரு மணி நேரத்துக்கு முன்னாடியே வந்துடுங்க. என் கூட அந்த ஒரு மணி நேரத்தை செலவு பண்ணுங்க. ப்ளீஸ் அப்பா..!
-
இந்த நூல் சம்பளம் மட்டுமா வாழ்க்கை?, ஆரிசன் ஸ்வெட் மார்டன் அவர்களால் எழுதி கண்ணதாசன் பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.
Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , சம்பளம் மட்டுமா வாழ்க்கை?, ஆரிசன் ஸ்வெட் மார்டன், Orison Swett Marden, Nirvagam, நிர்வாகம் , Orison Swett Marden Nirvagam,ஆரிசன் ஸ்வெட் மார்டன் நிர்வாகம்,கண்ணதாசன் பதிப்பகம், Kannadhasan Pathippagam, buy Orison Swett Marden books, buy Kannadhasan Pathippagam books online, buy tamil book.
|