book

தலித்தியச் சிக்கல்களும் தீர்வுகளும்

Talitiya sikkalgalum Theervugalum

₹80+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :சி. வாசுகி
பதிப்பகம் :நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
Publisher :New century book house
புத்தக வகை :கட்டுரைகள்
பக்கங்கள் :126
பதிப்பு :1
Published on :2007
ISBN :9788123411675
குறிச்சொற்கள் :சரித்திரம், போராட்டம், தலைவர்கள், முயற்சி, எழுச்சி
Add to Cart

தலித்தியச் சிக்கல்களும் தீர்வுகளும் ; அரிது அரிது மானிடராய்ப் பிரத்தல் அரிது' என்ற அவ்வையின் கூற்று வையக மாந்தர் அனைவருக்கும் உரியது. இவர்களுள் பாகுபாடு பார்த்தது மானுட சமுதாயம். உயர்ந்தவர் தாழ்ந்தவர் எனச்சாதிப்பாகுபாட்டையும், ஆண் , பெண் எனப் பால் பாகுபாட்டையும் விதைத்தது. இப்பாகுபாடுகள் யாவும் செயற்கையானவை. தற்காலிகமானவை.பாகுபாடுகள் களையப்பட்டுச் சமத்துவம்  பெறவேண்டும் என்ற சிந்தனை இந்நூலாசிரியரிடம் இயல்பாகவே உள்ளது. தலித்தியச் சிக்கல்களுக்குத் தீர்வுகாணும் வழிமுறைகளைப் பல கோணங்களில் ஆய்வு செய்து பல படைப்புகளை ஆதாரம் காட்டி 'தலித்தியச் சிக்கல்களும் தீர்வுகளும்' என்னும் இந்நூல் உருவாக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற நூல்கள் அடக்கி ஒடுக்கப்பட்டவர்களுக்குப்  புதுவாழ்வு கொடுக்கும். தீண்டாதவன் என்றால் தீயவற்றைத்தீண்டாதவன் நன்மைகளை நாடுபவன் என்ற கருத்தை எழுத்துலகில் நிலைநிறுத்துவதுடன் நடைமுறையில் கடைப்பிடிக்கும் நிலையை உருவாக்கவேண்டும்.

                                                                                                                                         -- பதிப்பகத்தார்.