-
நஞ்சாகும் மருந்துகள் ; பிறர் படும் பிரசவ வேதனைகளைக் கண்டு, பேறுகாலங்களைச் சந்திப்பதற்கு அஞ்சி, திருமணமே வேண்டாமென்றிருந்த பெண்கள், பெற்றோரின் கட்டாயத்திற்கிணங்கி, திருமணம் செய்து, தலைப்பிரசவத்தைச் சந்திக்கும்போது வலிதாங்காமல் துடித்து அறுவை சிகிச்சைக்குழந்தைப் பேற்றுக்கு அவர்களே துணிந்துவிடுகிறார்கள். அதைப்போல் வலிதாங்க முடியாமல் உடனடி நிவாரணம் தேடுகின்றவர்கள் பக்கவிளைவுகளைக் கருதாமல் மருந்து, ாத்திரைகளை உட்கொள்கிறார்கள்.தூக்கம் வரவில்லையென்று மாத்திரைகள் போட்டுத்தூங்கிப் பழகி மாத்திரைகளுக்கே அடிமையாகிவிடுகிறார்கள். போதை மாத்திரைகளைப் பயன்படுத்தியும் உடலைக் கெடுத்துக்கொள்கிறார்கள். பக்கவிளைவுகள் ஏற்படாமல் எச்சரிக்கையாகச் சிகிச்சை செய்யும் மருத்துவர்கள் சக்திவாய்ந்த மாத்திரைகளைக் கொடுக்கத் தயங்குவார்கள். ஆனால் பின்விளைவுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் வியாபார நோக்கில் நோயாளிகள் கேட்டதைக் கொடுத்துவிடும் மருத்துக்கடைக்கார்ர்கள் உடனடி நிவாரணத்துக்கான மருந்து, மாத்திரைகளைக் கொடுத்து நல்ல பெயர் வாங்கிக் கொள்கிறார்கள். இந்நூலில் நோய்களையும் அதற்கான மருந்துகளையும் சொல்லி, அதை முறைதவறிப் பயன்படுத்துவதால் ஏற்படும் பக்கவிளைவுகளின் அறிகுறிகளையும் அறிமுறைகளையும் டாக்டர் எஸ்.ராஜா அவர்கள் எடுத்துக்காட்டி எச்சரிக்கிறார்.
_ பதிப்பகத்தார்.
-
This book Nanjaagum Marunthugal is written by Dr. S. Raja and published by New century book house.
இந்த நூல் நஞ்சாகும் மருந்துகள், டாக்டர்.எஸ். ராஜா அவர்களால் எழுதி நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.
Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Nanjaagum Marunthugal, நஞ்சாகும் மருந்துகள், டாக்டர்.எஸ். ராஜா, Dr. S. Raja, Maruthuvam, மருத்துவம் , Dr. S. Raja Maruthuvam,டாக்டர்.எஸ். ராஜா மருத்துவம்,நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், New century book house, buy Dr. S. Raja books, buy New century book house books online, buy Nanjaagum Marunthugal tamil book.
|