book

கோட்டையும் கோடம்பாக்கமும்

Kotayum kodambakkamum

₹60+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ஆரூர்தாஸ்
பதிப்பகம் :விகடன் பிரசுரம்
Publisher :Vikatan Prasuram
புத்தக வகை :சினிமா
பக்கங்கள் :187
பதிப்பு :1
Published on :2006
ISBN :9788189780098
குறிச்சொற்கள் :திரைப்படம், தகவல்கள், சரித்திரம், தலைவர்கள், பொக்கிஷம்
Add to Cart

அரசியல் மற்றும் சினிமா ஆகிய இரண்டு துறைகளுக்கும் அதிக முக்கியத்துவம் கொடுப்பவர்கள் தமிழக மக்கள்.

இரண்டும் தங்களது வாழ்வோடு இரண்டறக் கலந்துவிட்டதன் காரணமாகவே, அரசியலில் நுழைந்த சினிமா கலைஞர்களுக்குத் தகுந்த ஆதரவையும் தமிழக மக்கள் அளித்து வருகின்றனர். இதற்கு, அண்ணா, மு.கருணாநிதி, எம்.ஜி.ஆர், ஜெ.ஜெயலலிதா ஆகியோர் உச்சாணிக் கொம்புக்குச் சென்றதே இதற்குச் சான்று. சினிமா கலைஞர்களின் புகழை பிரசாரங்களுக்குப் பயன்படுத்தி, அரசியல் கட்சிகள் தங்களது வாக்குகளை உயர்த்திக் கொண்டன. சினிமா கலைஞர்களும் பொதுநல நோக்குடன், சில சமயங்களில் சொந்த வளர்ச்சிக்கும் அரசியலைப் பயன்படுத்திக் கொண்டனர்.

இந்த நேரத்தில், அரசியலில் ஈடுபடும் கலைஞர்களைப் பற்றி முழுவதுமாக மக்கள் அறிந்து கொள்வது அவசியம். இதனை சிறந்த முறையில் அலசுவதற்கு தகுதியானவர் 'கலை வித்தகர்' ஆரூர்தாஸ். கடந்த 55 ஆண்டுகளாக, தமிழ் சினிமாவில் கதை _ வசனத் துறையில் தனக்கென ஒரு தனி இடத்தைப் பெற்று, விருதுகள் பல குவித்துவரும் ஆரூர்தாஸ், தமிழ் சினிமா _ தமிழக அரசியல் ஆகியவற்றோடு, அரசியலில் நுழைந்த கலைஞர்களையும் நெருங்கி நின்று உற்று நோக்கி வருபவர். அத்துடன், அரசியலில் வெற்றி தோல்விகளைக் கண்ட கலைஞர்களுடன் நெருங்கிப் பழகியவர்.

தமது அனுபவங்களை, 'கோட்டையும் கோடம்பாக்கமும்!' என்ற தலைப்பில் சுவைபட எழுதியுள்ளார் ஆரூர்தாஸ்.

இந்த புத்தம் புதியப் புத்தகம், அரசியலில் நுழைந்த _ நுழைந்து கொண்டிருக்கும் கலைஞர்களைப் பற்றி விரிவாகத் தெரிந்துகொள்ள உறுதுணை புரியும் என்பது உறுதி.