-
மனிதனின் இறைவழிபாட்டில், மலைகளுக்கு எப்போதுமே சிறப்பிடம் உண்டு. அதிலும், கண்ணுக்கு எட்டிய தூரம் வரையில் பச்சைப் போர்வையைப் போத்திக்கொண்டு, பார்ப்பவர்களுக்குள் பரவசத்தை ஏற்படுத்தும் கொல்லிமலையை ‘சித்தர்களின் சொர்க்க பூமி!’ என்றால், அது மிகையல்ல. உலக வாழ்க்கையை, ஏழு வகையான கோட்பாடுகளின் அடிப்படையில் வாழ்ந்து, மனித வாழ்வின் பல்வேறு நிலைகளிலும் தன் நிலையை மறவாது, அறத்தோடு வாழும் கலையை எளிய பாடல்களில் விளக்கி, மண்ணுலக உயிர்களுக்கு உதவிகள் பல புரிபவர்கள்தான் சித்தர்கள். கொல்லிமலையை இறுக தழுவியபடி காட்சி அளிக்கும் வனத்தில் வாழ்ந்த அகத்திய சித்தர், பாம்பாட்டிச் சித்தர், கடுவெளி சித்தர்... போன்ற பல்வேறு சித்தர்களின் வரலாறு, அவர்களின் ரசவாத சிறப்புகள், அற்புத நிகழ்வுகள், மக்கள், இயற்கை சக்திகளின் வழியில் வாழ்வதற்கான நெறிமுறைகள்... என சித்தர்களின் பல்வேறு சிறப்புகளும் இந்த நூலில் காட்சிகளாக விரிகின்றன. மேலும், கொல்லிமலைக்குச் செல்வோர் அங்கு காண வேண்டிய இடங்கள், கோயில்கள், படகுத் துறை, அதற்கான பயணக் குறிப்புகள், மலைவாழ் மக்களின் பழக்கவழக்கங்கள்... என கொல்லிமலையின் அற்புத அமைப்பையும் எளிமையான நடையில் தொகுத்துள்ளார் நூலாசிரியர் ராஜாதிருவேங்கடம். அற்பத்தனமான செயல்களுக்காக ஆத்ம அமைதியை விற்றுவிட்டு, அனுதினமும் ஆண்டவனை தேடுகிறது இன்றைய உலகம். ஆம்! புறத்தூய்மையை மட்டும் பொலிவுடன் வைத்துக்கொண்டு பொக்கிஷ வாழ்க்கையைத் தொலைத்தபடி நிற்கும் மக்களை, தெளிவான பாதையில் அழைத்துச் செல்கிறது இந்த நூல். சித்தர்கள், ஆராய்ச்சி அடிப்படையில் அனுபவபூர்வமாக உணர்ந்த விஷயங்களையே மருத்துவக் குறிப்புகளாக கொடுத்திருப்பது, இந்த நூலுக்கே உரிய தனிச்சிறப்பு
-
This book Kollimalai Sithargal Malai Visit Anubavam! is written by K.Raja Thiruvenkatam and published by Vikatan Prasuram.
இந்த நூல் கொல்லிமலை சித்தர்கள் மலை விசிட் அனுபவம்!, கே. ராஜாதிருவேங்கடம் அவர்களால் எழுதி விகடன் பிரசுரம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.
Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Kollimalai Sithargal Malai Visit Anubavam!, கொல்லிமலை சித்தர்கள் மலை விசிட் அனுபவம்!, கே. ராஜாதிருவேங்கடம், K.Raja Thiruvenkatam, Payanak Katturai, பயணக் கட்டுரை , K.Raja Thiruvenkatam Payanak Katturai,கே. ராஜாதிருவேங்கடம் பயணக் கட்டுரை,விகடன் பிரசுரம், Vikatan Prasuram, buy K.Raja Thiruvenkatam books, buy Vikatan Prasuram books online, buy Kollimalai Sithargal Malai Visit Anubavam! tamil book.
|
௧௫/௬/௨௦௧௨
டியர் சார்
யு ஆர் தோஇங் எ வெரி வொந்டெர்புல் சோப் ,திஸ் வெரி மச் நேச்சரி போர் தி பப்ளிக் தோஸ் வதோ ஆர் அல்வய்ஸ் என்ககேத் இன் வொர்க்.
தி இஸ் டு பே கோண்டினுது பி தி கரசே ஒப் கோட்.
வித் ரேகர்ட்ஸ்
சுப்ரமணியன்.