book

லெனினுடன் சில நாட்கள்

Leninutaṉ cila natkal

₹24+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :கு. அழகிரிசாமி
பதிப்பகம் :தமிழ்ப்புத்தகாலயம்
Publisher :Tamil Puthakalayam
புத்தக வகை :கட்டுரைகள்
பக்கங்கள் :92
பதிப்பு :4
Published on :2000
Out of Stock
Add to Alert List

ரு(ர)ஷ்யாவின் தனிப் பெருந்தலைவராக விளங்கிய லெனினுடன் நெருங்கிப் பழகியவர் மாக்ஸிம் கார்க்கி. இருவரும் உற்ற நண்பர்கள்; பரஸ்பரம் ஒருவரிடத்தில் ஒருவர் பெருமதிப்பு வைத்துப் பழகியவர்கள். கார்க்கி தம் வாழ்நாளில் நெருங்கிப் பழகியவர்களைப் பற்றி எழுதிய நினைவுக் குறிப்புகள் மிகவும் அற்புதமாக இருக்கின்றன. அதிலும் லெனினைப்பற்றி அவர் எழுதியிருக்கும் நினைவுக் குறிப்புகள் மிகமிக அற்புதமாக இருக்கின்றன. லெனினுடை உருவத் தோற்றம், நடை உடை பாவனை, பேச்சுத் தோரணைகள், சீரிய பண்பு முதலியவற்றை இந்தக் குறிப்புகள் படம் பிடித்துக் காட்டுகின்றன. அத்துடன், லெனின் காலத்தில் நடந்த சில முக்கியமான நிகழ்ச்சிகளை யும் கார்க்கி சித்திரிக்கிறார். அநேக கொள்கை, கோட் பாடுகளைப் பற்றி விளக்கமும் விமர்சனமும் செய்திருக்கிறார். லெனினைப் பற்றி எழுதப்பட்ட நூல்களில் முக்கியமானதொரு ஸ்தானத்தைப் பெறக் கூடியது இந்த "லெனினுடன் சில நாட்கள்."