book

அதிசய ஆலயங்கள் 80

Athichaya aalayankal 80

₹50+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :வே. இராமநாதன்
பதிப்பகம் :தமிழ்ப்புத்தகாலயம்
Publisher :Tamil Puthakalayam
புத்தக வகை :ஆன்மீகம்
பக்கங்கள் :128
பதிப்பு :1
Published on :2007
Out of Stock
Add to Alert List

'கோயில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம்' என்பதற்கேற்ப இந்தியாவில் குறிப்பாகத் தமிழகத்தில் கோயில்கள் மிக அதிகம். இறை நம்பிக்கையின் வெளிப்பாடாகக் கோயிலுக்குச் சென்று கடவுளை வழிபடுவதை ஒரு பழக்கமாக, வழக்கமாகக் கொண்டுள்ளமை மட்டுமே இன்று பெரும்பான்மையினரின் நடைமுறை. ஆனால், அர்த்தம் தெரிந்து படிப்பதும், பாடுவதும், உணர்ந்து செயலாற்றுவதும், வழிபடுவதும் என்று திசை திரும்ப வேண்டும். இப்படி அறிந்து, தெரிந்து, புரிந்து, உணர்ந்து செய்யப்பெறும் எக்காரியமும் மிகு பலனை, மிகு சுவையைத் தரும். நமது பாரம்பரியக் கலாச்சாரம் என்பதை பக்தியாக மட்டுமே பாவிப்பதால் சரித்திரம், புராணம்-இவை பற்றித் தெரிந்துகொள்ள நாட்டம் எழாமல் கோயில் வழிபாடு, 'பக்தி-வழிபாடு' என்கிற வட்டத்திற்குள் தடுத்தாட்கொள்ளப்பட்டுவிட்டது. இந்தப் போக்கினை மாற்றிடவும் தமிழ்ப் புத்தகாலயம் அவ்வப்போது குறிப்பிட்ட நூல்களைப் பதிப்பித்து வழங்கி வருகிறது. நாம், நமது தமிழக் கோயில்கள் பற்றித் தெரிந்துகொள்ள, அறிந்துகொள்ள, கண்டு வழிபட, வியக்க, ரசிக்க, உய்த்துஉணர பற்பல தகவல்கள் உள்ளன இந்நூலில். கேயில், இறைவன்-இறைவி, சுற்றுப்புறம், சிற்பம், சரித்திர-புராணச் சிறப்புச் செய்திகள் -இவைகளை மிகச் சுவையாக சுருக்கமாக அளித்துள்ளார் ஆசிரியர். கட்டுரைகளைப் - படித்தவுடன் நாம் எப்போது இந்தக் கோயிலுக்குச் செல்வது என்கிற ஆவலைத் தூண்டுதலே இப்புத்தகத்தின் வெற்றி. இந்நூலில் நவக்கிரகத்தலங்கள், சிவாலயங்கள், புகழ்பெற்ற விநாயகர் தலங்கள், முருகனின் அறுபடைவீடுகள், கும்பகோணக் கோயில்கள், மாரியம்மன் கோயில்கள், கங்கைகொண்ட சோழபுரம் போன்ற எண்பத்தொரு சீர்மிகு சிறப்பாலயங்கள் பற்றி ஆசிரியர் சுவைபடக் கூறியுள்ளார்.