book

வெற்றிக்கு ஏழு படிகள்

Vetrikku yezhu padigal

₹70+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :சீனிவாசன்
பதிப்பகம் :விகடன் பிரசுரம்
Publisher :Vikatan Prasuram
புத்தக வகை :மாணவருக்காக
பக்கங்கள் :91
பதிப்பு :6
Published on :2009
ISBN :9788189780173
குறிச்சொற்கள் :முயற்சி, திட்டம், உழைப்பு, வெற்றி, வழிமுறைகள்
Out of Stock
Add to Alert List

வெற்றி எல்லோருக்கும் பொதுவானது. 'வேடிக்கை மனிதரைப் போல் நானும் வீழ்வேன் என்று நினைத்தாயோ?' என்று வாழ்க்கையின் வெற்றியைப் பற்றி பாடுவார் பாரதியார். ஒருவர் பெற்றிருக்கும் வெற்றிதான் மனிதனின் அடையாளம். அதனால்தான் சின்னக் குழந்தைகள் தொடங்கி பெரியவர்கள் வரை வெற்றியின் ருசியைத் சுவைத்துவிட துடிக்கிறோம். வாழ்க்கையில் எல்லோரும் வெற்றிப் பந்தயத்தில் கலந்து கொண்டே தீரவேண்டும்.
எப்படியாவது வெற்றி பெற்றுவிட வேண்டும் என துடிக்கிறவர்களுக்கு, எப்படி வெற்றியடைவது என்பது புலப்படவில்லை. 'நீ எத்தனை புயல்களைச் சந்தித்தாய் என்பது பற்றி உலகத்துக்கு கவலை இல்லை. பத்திரமாகக் கப்பலை கரை சேர்த்தாயா என்பதுதான் முக்கியம்' என்று சுவாமி விவேகானந்தர் அன்று சொன்னது இன்று அன்றாட வாழ்க்கையின் ஃபார்முலாவாகிவிட்டது.

கப்பலை பத்திரமாகக் கரை சேர்க்கிற வழியை 'ஏழு படிகளாக' விளக்கியிருக்கிறார் 'பிரைம் பாயின்ட்' சீனிவாசன். சின்னச் சின்ன உதாரணங்கள், ஆழம் பொதிந்த வெற்றிக் கதைகள், எளிமையான வழிமுறைகள் என்று வெற்றிக்கான ஏழு படிகளையும் சுருக்கமாகவும், அழகாகவும் விளக்கியுள்ளார். ஏழு பண்புகளின் கூட்டுக்கலவையாக வெற்றியைப் பகுக்க முடியும் என்கிற முயற்சியே பாராட்டுக்குரியது.

வெற்றித் திலகத்தை ஒரு சின்ன சிமிழுக்குள் அடக்கிக் காட்டுவது சவாலான காரியம்தான். கேள்வி_பதில் முறையில், மனித வாழ்வில் நிகழும் சிக்கல்களை விவரித்தும், அதை தனக்குத்தானே பரிசோதித்துக் கொள்கிற விதத்திலும் அமைந்திருக்கின்றன.

வெற்றி என்பது இழுத்துப் பூட்டப்பட்ட அலிபாபாவின் குகை அல்ல... விரிந்து கிடக்கிற வானம். இந்த 'ஏழு சிறகுகள்' இருக்கிற யாரும் வானத்தில் சுலபமாகப் பறக்க முடியும்.

வெற்றி பெற வாழ்த்துக்கள்!