book

கண்களின் வார்த்தைகள் புரியாதோ?

Kangalin Vaarthaigal Puriyadhoa?

₹120+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :அமுதவல்லி கல்யாணசுந்தரம்
பதிப்பகம் :அருணோதயம்
Publisher :Arunothayam
புத்தக வகை :நாவல்
பக்கங்கள் :320
பதிப்பு :1
Published on :2011
Add to Cart

வாஸந்தி திருவண்ணாமலையில் பிறந்து வளர்ந்து, ஆறு மாதங்களுக்கு முன்பு, பி.காம். பட்டப் படிப்பை முடித்து, ஆடிட்டராக இருக்கும், அத்தை மகன் விவேக்கிடம், வேலை செய்தபடி, மேல் படிப்பை தொடர், பெரும் போராட்டத்திற்குப் பின்பு, தந்தை தியாகராஜனிடமும், தந்தை வழி பாட்டியான பவானியிடமும் அனுமதி பெற்று, மூன்று மாதங்களுக்கு முன்பு சென்னைக்கு குடிபுகுந்த இருபது வயது பூந்தோட்டம். திருமணம் ஆகாமல் விவேக் இருப்பதே பெரும் தடையாக இருக்க, பவானி அம்மா, தனது மகன் வயிற்று பேத்தியான வாஸந்தியை தனது சொந்த மகளான மாதவியின் வீட்டிற்கு, அனுப்ப தியாகராஜன் இரண்டு மாதங்கள் போராட வேண்டி இருந்தது. "அத்தை வீட்டில் இல்லை பாட்டி. ஹாஸ்டலில் தங்கிக் கொள்கிறேன். நீங்க பயப்படுவது மாதிரி எதுவும் நடக்காது" என்று சத்தியம் செய்யாத குறையாக, உண்ணாவிரதப் போராட்டம் இருந்து இங்கே வந்த வாஸந்தியின் மாற்றம் அவருக்கே கவலையாகத் தான் இருந்தது. வாஸந்தியும் விவேக்கும், வேலை விஷயமாகவோ, விஷயமே இல்லாமலோ, எந்நேரமும் பேசிச் சிரித்தனர். இவர்களுக்கு இடையே வெறும் மூன்று மாதப் பழக்கம் தானே? மகள் மேல் நம்பிக்கை வைத்து இருக்கும் தனக்கே அவள் சிரிப்பு கவலை தருகிறது என்றால், அம்மாவின் நிலை என்ன?