book

கீரைகளின் மருத்துவ குணங்கள்

₹60+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :கோவிந்தாச்சாரி
பதிப்பகம் :சுதர்ஸன் பதிப்பகம்
Publisher :Sudarshan Publication
புத்தக வகை :மருத்துவம்
பக்கங்கள் :160
பதிப்பு :6
Published on :2011
Out of Stock
Add to Alert List

"கீரைகளின் மருத்துவ குணங்கள் விலை மலிவான சாதாரணப் பொருட்களிலும், நிறைய பலன்களைப் பெற முடியும் என்பதற்கு சிறந்த எடுத்துக்காட்டு தான் கீரைகள். கீரைகள் தினமும் எடுத்து கொண்டால் மருத்துவரிடம் செல்ல வேண்டிய அவசியம் இருக்காது என்பார்கள் முதியோர்கள். அரைக்கீரை: தினமும் உண்ணத்தக்க கீரைகளில் இது தலையானது. எவ்வகை நோயாளிக்கும் ஏற்றது. கண் பார்வை, இரத்த நாளங்கள், ஜீரண உறுப்புகள் போன்றவற்றை நன்னிலையில் பாதுகாக்கும். பிரசவமான மகளிர்க்கு உடனடி ஊட்டம் அளிக்கும். மணத்தக்காளி: வாய்ப்புண், வயிற்றுப்புண்ணுக்கு சிறந்த மருந்து. மூலநோய், குடல் அழற்சி கட்டுப்படும். குரல் வளம் பெருக்கும். அல்சருக்கு அற்புத மருந்து. வாரம் 2 முறை உண்ணத்தக்கது.சளைக்கீரை: மலச்சிக்கலை விரட்டும். ஆண்மையைப் பலப்படுத்தும்.ளிர்ச்சி தரும். இக்கீரையை ஆஸ்துமா போன்ற நோயுடையவர்கள் கோடை காலத்தில் மட்டுமேஉண்ணவும்.வெந்தயக்கீரை: வாயுவைக் கண்டிக்கும். கல்லீரலைச் சுறுசுறுப்பக்கும். புரதம், தாதுக்கள், வைட்டமின் சி இதில் ஏராளம். வாரம் 1 முறை உண்டு வர மூட்டுவலி, இடுப்புப் பிடிப்பு போன்றவை நீங்கும். சிறுநீர் கோளாறு அண்டாது.முளைக்கீரை: எவ்வயதினரும், தினமும் உண்ணக்கூடியது. நல்ல பசியைத் தூண்டும். காச நோயின் போது வரும் காய்ச்சலைக் கட்டுப்படுத்தும். அகத்திக்கீரை: வைட்டமின், இரும்புச்சத்து, சுண்ணாம்புச் சத்து நிறைந்தது. விஷங்களை முறிக்கும். கண்பார்வை நரம்புகளுக்கு வலுவூட்டும். கிருமிகளைக் கொல்லும். ஆனால், இதனை வயிற்றுக் கோளாறுடையோர், வயோதிகர் உண்ணலாகாது. மாதம் ஒரு முறையே இது உண்ணத்தக்கது. கரிசலாங்கண்ணி கீரை: கபம், பித்தவாயுவையும் கண்டிக்கும். மூலநோய், நாட்பட்ட கிராணி இவற்றிற்கு மாமருந்து."