book

ஆண்ட்ரு கார்னகி சுயசரிதை

₹100+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :தமிழில்: உதயகுமார்
பதிப்பகம் :கண்ணதாசன் பதிப்பகம்
Publisher :Kannadhasan Pathippagam
புத்தக வகை :வாழ்க்கை வரலாறு
பக்கங்கள் :272
பதிப்பு :1
Published on :2007
Add to Cart

கார்கேகி 1835ஆம் ஆண்டு ஸ்கொட்லாந்தில் பிறந்தார். தனது 13வது வயதில் தன் குடும்பத்தினருடன் அமெரிக்காவுக்குச் சென்று அங்கு பருத்தி ஆலை ஒன்றில் நூல்சுற்றும் பையனாக சொற்ப சம்பளத்திற்கு வேலை செய்ய ஆரம்பித்தார்.ஸ்காட்லாந்தில் பிறந்தவர். அப்பா நெசவாளர். 13 வயதில் குடும்பத்துடன் அமெரிக்கா சென்றார். ஒரு தொழிற்சாலையில் வேலை பார்த்தார். பிறகு, தந்தி கொண்டு செல்லும் பணியாளரானார். சிறிது காலத்தில் தந்தி ஆபரேட்டராக உயர்ந்தார். பென்சில்வேனியாவில் ரயில் நிலையப் பணியில் சேர்ந்தார். தொழில் நுணுக்கங்களைத் தெரிந்துகொண்டார். 3 ஆண்டுகளில் ரயில் நிலையக் கண்காணிப்பாளராக பதவி உயர்வு பெற்றார். ரயில்வேயில் வேலை பார்க்கும்போதே முதலீடுகள் செய்தார். எண்ணெய் தொழிலில் நிறைய வருமானம் கிடைப்பதை அறிந்தார். 30-வது வயதில் ரயில்வே வேலையை விட்டுவிட்டு தொழிலில் இறங்கினார்.
 அடுத்த 10 ஆண்டுகள் முழு மூச்சாக எஃகுத் தொழிலில் ஈடுபட்டார். கார்னகி ஸ்டீல் கம்பெனி அமெரிக்காவின் எஃகு உற்பத்தியில் புரட்சியை உண்டாக்கியது. நாடு முழுவதும் தொழிற்சாலைகளை நிறுவினார். எஃகு உற்பத்தியில் புதிய தொழில்நுட்பம், வழிமுறைகளைப் பயன்படுத்தினார். கச்சாப் பொருட்கள், கப்பல்கள், பொருட்களைக் கொண்டுசெல்வதற்கான ரயில் பாதை, எரிபொருளுக்கான நிலக்கரி சுரங்கங்கள் என தொழிலுக்குத் தேவையான அனைத்தையும் சொந்தமாக்கிக் கொண்டார். எடுத்த காரியத்தை முடிக்காமல் விடமாட்டார். இதனால் தொழில் துறையில் ஆதிக்க சக்தியாகவும் அபரிமிதமாக சொத்துகளுக்கு அதிபதியாகவும் திகழ்ந்தார். இவரது நிறுவனத்தின் அபார வளர்ச்சியால் அமெரிக்காவின் பொருளாதாரமும் உயர்ந்தது. அமெரிக்காவை வடிவமைத் தவர்களில் ஒருவர் என்ற புகழ் மகுடத்தையும் சூடினார்.