book

சங்ககால அரசு உருவாக்கம்

₹75+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :முனைவர்.ஜெ. சியாமளா
பதிப்பகம் :பாவை பப்ளிகேஷன்ஸ்
Publisher :Paavai Publications
புத்தக வகை :கட்டுரைகள்
பக்கங்கள் :170
பதிப்பு :1
Published on :2010
ISBN :9788177356465
Out of Stock
Add to Alert List

இரண்டாயிரம் ஆண்டுகளைக் கடந்த நிலையிலும் சங்க இலக்கியங்களை நாம் கொண்டாடி வருகிறோம்.  காரணம் முன்னைப் பழமைக்கும் பழமையதாய், பின்னைப் புதுமைக்கும் புதுமையதான அவற்றின் தன்மை 'புறநானூறு சொல்லும் செய்திகளைப் பயின்றே வாழ்நாள் முழுதும் கழித்து விடலாம்;  அப்போதும் புதிய புதிய செய்திகள் கிடைத்துக் கொண்டே இருக்கும்' ஹார்ட் அவர்களின் இக்கூற்று வெறும் புகழுரையன்று.  உரையாசிரியர்கள் தொடங்கி இன்றைய ஆய்வாளர்கள் வரை சங்க இக்கியங்களைப் பல நிலைகளில் அணுகியுள்ளனர்.  இலக்கணத்தை இலக்கியத்தில் பொருத்திப் பார்த்தல் அவற்றுள் ஒன்று.  தொல்காப்பியமென்னும் பேரிலக்கணத்தில் கூறப்படும் மெய்ப்பாட்டியல் கோட்பாடகளைப் புறநானூற்றில் பொருத்திப் பார்க்கும் முயற்சி இங்கு மேற்கொள்ளப்படுகிறது. 


அவ்வாறு பொருத்திக் காணுதலின் வழிப்பெறப்பட்ட தரவுகளின் அடிப்படையில் மெய்ப்பாட்டினடியாக்க் கட்டமைக்கப்படும் சமுதாயம் (அ) சமூகச் சூழல் என்ன? என்ற வினாவிற்கு விடைகாண இந்நூல் முற்படுகிறது.