book

சிலப்பதிகாரம் புகார்க் காண்டம்

₹120+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ந.மு. வேங்கடசாமி நாட்டார்
பதிப்பகம் :சாரதா பதிப்பகம்
Publisher :Saratha Pathippagam
புத்தக வகை :இலக்கியம்
பக்கங்கள் :288
பதிப்பு :10
Published on :2016
Add to Cart

புகார் நகரப் பெருவணிகன் மாநாய்கன்; அவன் மகள் கண்ணகி; அதே நகரத்து உயர்ந்து ஓங்கு செல்வத்தான் மாசாத்துவான்; அவன் மகன் கோவலன். புகார் நகரமே விழாக்கோலம் கொள்ள, கோவலன்-கண்ணகி திருமணம் வெகு சிறப்பாக நடைபெறுகிறது.இதனைத் தொடர்ந்து தனிமனையில் குடியிருத்தப் பெறும் புதுமணத் தம்பதியர் புதுமண வாழ்வின் இனிமையைத் துய்த்து மகிழ்கின்றனர். சில ஆண்டுகள் மகிழ்ச்சியாக வாழ்கின்றனர். மகிழ்ச்சி வெள்ளத்தில் திளைத்த அவர்கள் வாழ்வில் இடையூறு வந்து சேர்கிறது. சோழன் அவையில் நடன அரங்கேற்றம் செய்து தலைக்கோல் அரிவை என்ற பட்டத்தையும், 1008 கழஞ்சு பொன் விலை பெறும் பச்சை மாலையையும் பரிசாகப் பெற்ற மாதவியைச் சேர்ந்து அந்த மகிழ்ச்சியில் தன் மனைவியை மறக்கிறான் கோவலன்.