நாம் உண்ணும் உணவும் பயன்படுத்தும் தானியங்கள் - அரிசி வகைகள் - காய்கறிகள்
- கனிகள் - மூலிகைகள் யாவும் எந்த வகை மருத்துவப் பண்புகளைக் கொண்டவை?
அவைகளை எந்த வகையான பக்குவத்தில் பயன்படுத்தினால் உடலுக்கு ஆரோக்கியத்தைத்
தரும் என்பதையும்? பதார்த்தங்கள் ஒவ்வொன்றும் எப்படிப்பட்ட குணம் உடையவை?
என்பதையும் இந்த நூலில் பொருள் வாரியாகத் தெளிவு செய்யப்பட்டுள்ளது. இதைத்
தொகுத்து விளக்கம் எழுதிய திரு. முல்லை முத்தையா அவர்கள் ஒரு சிறந்த
எழுத்தாளர் என்பதை தமிழகம் நன்கு அறியும். இந்த நூல் தமிழ் மக்களுக்கும்,
உடல் ஆரோக்கியத்தையும், மன ஆரோக்கியத்தையும் நன்கு பேணிப் பாதுகாக்கும்
ஆர்வமுடைய அனைவருக்கும் பயன்படும். தமிழ் மக்கள் இந்த நூலினை வாங்கிப் பயன்
பெறுவார்கள் என்ற நம்பிக்கையில் ஸ்ரீசெண்பகா பதிப்பகம் இந்த நூலை
வெளியிடுகிறது.