book

யூ ஆர் அப்பாயின்டெட்

You are Appointed

₹90+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :கே. பாண்டியராஜன்
பதிப்பகம் :விகடன் பிரசுரம்
Publisher :Vikatan Prasuram
புத்தக வகை :சுய முன்னேற்றம்
பக்கங்கள் :181
பதிப்பு :4
Published on :2007
ISBN :9788189936907
குறிச்சொற்கள் :முயற்சி, திட்டம், உழைப்பு, கற்பனை, சிந்தனை
Out of Stock
Add to Alert List

ஒவ்வொரு நாளும் புதிது புதிதாக பல துறைகள் புறப்பட்டு வருகின்றன. பல திசைகளில் வேலைவாய்ப்புகள் பெருகி வருகின்றன.

வேலையில் சேர வெறும் படிப்பு மட்டும் இருந்தால் போதாது. பேச்சுத் திறமை, அடுத்தவரோடு பழகும் திறமை என்று பலவிதமான திறமைகளும் தேவைப்படுகின்றன. இதையெல்லாம் ஒரு மூத்த சகோதரன் மாதிரி, இளைய தலைமுறைக்கு எடுத்துச் சொல்ல முழுத் தகுதி படைத்தவர் 'மா ஃபா' கே.பாண்டியராஜன்.

சிவகாசிக்கு அருகே ஒரு சிறிய கிராமத்தில் பிறந்து & பிறந்த உடனே தந்தையை இழந்து, வறுமையில் வாடிய பாண்டியராஜன், சிறுவயதிலேயே தீப்பெட்டித் தொழிற்சாலையில் குச்சி அடுக்குவது, மருந்து முக்குவது என நாள் பூராவும் கந்தகத்திலேயே உழன்று திரிந்தவர். கடுமையான உழைப்புக்கு மத்தியில் பள்ளிக்குச் சென்று படிப்பிலும் தனது கெட்டிக்காரத்தனத்தை நிரூபித்துக் காட்டினார். அதற்குப் பரிசாக 'மேற்கல்வி உதவித் தொகை' கிடைக்க... அவர் நினைத்தே பார்த்திராத கல்லூரிகளில் படிக்கிற வாய்ப்புகள் தேடி வந்தன.

அனுபவப் படிப்பும் கை கொடுக்க, உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் தலைசிறந்த நிறுவனங்களின் அறிமுகத்தையும் அபிமானத்தையும் பெற்று முன்னேறி, இப்போது 'மா ஃபா' என்கிற மனிதவள சேவை நிறுவனத்தின் தலைவராகத் திகழ்கிறார்.

தனது நிறுவனத்தின் மூலம், வேலை தேடும் இளைஞர்களுக்கு வழிகாட்டும் கே.பாண்டியராஜன், 'எந்த மாதிரி 'ஸாஃப்ட் ஸ்கில்ஸ்' இருந்தால் நல்ல வேலை கிடைக்கும்?', 'எந்த மாதிரி விருப்பங்கள் இருப்பவர்கள் என்ன வேலை தேடலாம்?' என்று வேலைவாய்ப்பு தொடர்பாக எழும் அத்தனை கேள்விகளுக்கும் ஆனந்த விகடன் இதழில் பதில் அளித்து வந்தார்.

அந்தக் கட்டுரைகளுக்கு அமோக வரவேற்பு கிடைத்தது. பல துறைகளைச் சேர்ந்த வல்லுநர்களிடமிருந்து அரிய பல டிப்ஸ்களைப் பெற்று, இளைஞர்களுக்கு பயன்படும்படியாக வழங்கியது, கட்டுரைகளுக்கு மேலும் சிறப்புச் சேர்த்தது.

இந்தப் புத்தகம், மாணவர்களுக்கும் வேலை தேடும் இளைஞர்களுக்கும் வழிகாட்டும் கலங்கரை விளக்கமாகத் திகழும் என உறுதியாக நம்புகிறேன்.