book

சித்தன் போக்கு

Chithan Pokku (Modern World Classic Short Stories)

₹250+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :பிரபஞ்சன்
பதிப்பகம் :காலச்சுவடு பதிப்பகம்
Publisher :Kalachuvadu Pathippagam
புத்தக வகை :நாவல்
பக்கங்கள் :225
பதிப்பு :2
Published on :2006
ISBN :9788187477853
Out of Stock
Add to Alert List

பிரபஞ்சனின் இருபது கதைகளைத் தேர்ந்தெடுத்து வெளிவரும் இத்தொகுப்புக்காக அவரின் நூற்றுக்கும் மேற்பட்ட கதைகளை ஒருசேர வாசித்தேன். அந்த அனுபவம் மானாவாரி வேளாண்மை செழித்திருக்கும் பரந்த நிலங்களுக்குள் விடிகாலை வேளையில் காலோயச் சுற்றிவந்ததைப் போலிருந்தது. ஈரம் என் கால்களில் ஏறி உடம்பு முழுவதற்கும் பரவியது. ஈரம் என்பது அன்பு, கருணை, நம்பிக்கை, தியாகம், உதவி, பற்று உள்ளிட்ட நல்லியல்புகள் அனைத்துக்கும் பொருந்தும். செழித்த கதிர்களில் விருப்பத்திற்கு உட்பட்டும் விதவிதமானவற்றை ருசித்துப்பார்க்கும் வேட்கையினாலும் நேர்த்தியின் ஈர்ப்பாலும் சிலவற்றை தேர்வு செய்து பசியாறும் சிட்டுக்குருவியாகச் செயல்பட்டிருக்கிறேன்.