book

படைநடை (old book - rare)

Padainadai

₹15+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :சங்கை வேலவன்
பதிப்பகம் :நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
Publisher :New century book house
புத்தக வகை :கவிதைகள்
பக்கங்கள் :72
பதிப்பு :1
Published on :1993
ISBN :9788123401225
குறிச்சொற்கள் :கற்பனை, சிந்தனை, கனவு, கவிதை
Out of Stock
Add to Alert List

சங்கை வேலவனின் 'படை நடை' யில் நூறு விதப் பூக்கள் பூத்து குலுங்குகின்றன.

'உழைப்பு' என்ற கவிதையில்,

"உழைப்புக் கரங்கள்
உற்பத்திக் கருவிகளுடன்
கலவி செய்யாமல்
கவின் படைப்போ ஏதுமில்லை!"

என்று உற்பத்திச் சக்திகளை இனங்காட்டுகிறார்.

ஏதோ சில கவிதை வரிகள் எழுதிவிடுவதோடு, கவிஞனின் பணி முடிந்து விடுவதில்லை.  அது மேல்தட்டுப் பாணி.  அவனே ஒரு போராளியாக இருந்து, இயக்கச் செயல் வீரனாக இருந்து 'கவிதை என் கைவாள்' என்னும் போதுதான் 'ஒரு சக்தி பிறக்கிறது மூச்சினிலே!' அத்தகைய மாக்கவிஞராகவே தன் கவிதைகள் மூலம், செயல்கள் மூலம் விளங்குகிறார் சங்கை வேலவன்!.