book

கம்ப ராமாயணம் மூலமும் உரையும் (சுந்தர காண்டம் 1&2)

Kambaramayanam: Sundara Kaandam

₹650
எழுத்தாளர் :வ.த. இராமசுப்ரமணியம்
பதிப்பகம் :திருமகள் நிலையம்
Publisher :Thirumagal Nilayam
புத்தக வகை :இலக்கியம்
பக்கங்கள் :1019
பதிப்பு :5
Published on :2010
Add to Cart

அனுமனின் அறிவுக்கூர்மை, சாதுரியம், வீரம், வலிமை பெருமை முதலியவைகளே மிக அழகாக வருணித்துச் சொல்லப்பட்டுள்ளன. மேலும் பகவானே, அனுமனின் உதவியை நாடி செயல் புரிந்தான் என்பதும் இராமமந்திரத்தால் சீதாப்பிராட்டியின் உயிரைத் தந்தவன் என்பதும் ஆகிய அனுமனுடைய சிறப்புக்கள் இந்தக் காண்டத்தில்தான் சொல்லப்பட்டுள்ளன. இக்காண்டத்தின் காவிய நாயகன் அனுமனே ஆவன். ஏனைய காண்டங்களின் காவியத் தலைவன் பகவான் இராபிரான் இக்காண்டத்தின் கதைத் தலைவன் பாகவத உத்தமனான அனுமன் ஆவன் பகவனைவிட பாகவதர்கள் ஏற்றம் பெற்றவர்கள் ஆதலால் இக்காண்டம் ஏனைய காண்டங்களைவிட அழகுடையது. புனிதமானது என்ற பொருளில் சுந்தரகாண்டம் என்று பெயர் வைக்கப்பட்டது எனலாம். இக்காண்டம் பாராயணம் செய்வதற்கேற்ற பெருமையுடையது. அனுமனை வழிபடு தெய்வமாகப் போற்றுதற்குரிய பெருமையினைத் தந்தது இக்காண்டமே ஆகும்.