book

காஞ்சி மகானின் கருணை உள்ளம்

Kanchi Mahanin Karunai Ullam

₹110+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ரா. வேங்கடசாமி
பதிப்பகம் :திருமகள் நிலையம்
Publisher :Thirumagal Nilayam
புத்தக வகை :ஆன்மீகம்
பக்கங்கள் :248
பதிப்பு :3
Published on :2009
குறிச்சொற்கள் :தெய்வம், கோயில், பொக்கிஷம், வழிமுறைகள், கருத்து, சரித்திரம்
Add to Cart

கலியுக தெய்வம், கற்பகவிருட்சம், காஞ்சி மாமுனி மகாபெரியவர் ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின் தெய்வாம்சங்களை எத்தனையோ விதங்களில் ஆராதித்து எவ்வளவோ படைப்புகள் வந்துகொண்டு இருக்கின்றன. அவற்றையெல்லாம் பக்த மகாஜனங்கள் அள்ளி அள்ளிப் பருகி பரவசம் அடைந்து கொண்டே இருக்கிறார்கள்.
மகா பெரியவரின் கண்வீச்சு ஒரே ஒரு தடவை தங்கள் மீது படிந்தாலே மோட்சம் கிட்டிவிட்டதாக ஆத்ம திருப்தி அடைந்தவர்கள் அநேகம் அநேகம். அப்படியிருக்க, அந்த பகவானே நேரடியாக வேடிக்கையும் வியப்புமாக, அன்பும் ஆசியுமாக அந்த பக்தர்களிடம் திருவிளையாடல் நடத்தினால் அதற்கு எவ்வளவு கொடுத்து வைத்திருக்கவேண்டும்! அந்த அற்புத திருவிளையாடல்களைப் படித்து ரசிப்பதில்தான் எத்தனை சுகமிருக்கிறது!

தமிழ் எழுத்தாளர்களில் மூத்த தலைமுறையைச் சேர்ந்தவரும், அபாரமான நல் அனுபவங்களைப் பெற்றவருமான ரா.வேங்கடசாமி, காஞ்சி மகா ஸ்வாமிகளுடன் தங்களுக்கு நேர்ந்த சிலிர்ப்பான அனுபவங்களை பக்தர்களிடம் கேட்டுத் தொகுத்து அதை 'காஞ்சி மகானின் கருணை நிழலில்...' என்ற தலைப்பில் சக்தி விகடனில் தொடராக எழுதியபோது, அது பெரும் வரவேற்பைப் பெற்றது. அத்துடன் மேலும் பல அனுபவங்களையும் தேடித் தொகுத்து இந்நூலில் உங்களுக்கு அளித்திருக்கிறோம்.

இதில் இடம் பெற்றிருக்கும் அரிய புகைப்படங்களும் உங்களைப் புளகாங்கிதம் அடையச் செய்யும் என்பதில் ஐயமில்லை. இந்த தெய்வீக ரசம் சொட்டும் அனுபவத் தொகுப்பை புத்தகமாக வெளியிடும் வாய்ப்பு எங்களுக்குக் கிடைத்தது பெரும் பாக்கியம். படிக்கக் கிடைத்த நீங்களும் அவ்வாறே உணர்வீர்கள்.

ஜெய ஜெய சங்கர!