book

குரு

Guru

₹75+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :பாலகுமாரன்
பதிப்பகம் :திருமகள் நிலையம்
Publisher :Thirumagal Nilayam
புத்தக வகை :கேள்வி-பதில்கள்
பக்கங்கள் :148
பதிப்பு :8
Published on :2017
Add to Cart

ஒரு பெரிய சமுத்திரத்தில் நீரை ஒரு சிறிய கண்ணாடிக் குப்பியில் எடுத்து, இதுதான் சமுத்திரம் என்று நான் சொன்னால் அது எவ்வளவு பொய்யாக இருக்குமோ, அது எப்படி உண்மையாகவும் இருக்குமோ அப்படித்தான் இந்த புத்தகமும் இருக்கிறது.

குரு என்கிற மாபெரும் விஷயத்தை சில சம்பவங்களாலும், அதைத் தொடர்ந்து, சில சிந்தனைகளாலும் விளக்குவதற்கு முயற்சி செய்திருக்கிறேன்.  உறவுகளையே புரிந்து கொள்வதிலேயே மிகுந்த சிக்கல்கள் ஏற்படுத்துகிற மனம் குருவைப்புரிந்து கொள்வதில் நாட்டமில்லாமல் பயத்தையே அடிப்படையாகக் கொள்கிறது.  பயம் கலந்த பணிவு தான் எல்லாரிடத்திலும் வெளிப்படுத்த வேண்டும் என்று பலர் சொல்லித்தர, பயம் கலந்த பணிவை எடுத்துக்கொண்டு கேள்விகளற்று விசாரிப்புகளற்ற வயதான ஒரு நபரை பல இளைஞர்கள் பணிந்து ஏற்கின்றார்கள்.  கொண்டாடுகிறார்கள்.

பயம் இருக்கும் இடத்தில் தெளிவு இருக்காது.  தெளிவு இல்லையெனில் இறை தரிசனம் கிடைக்காது.  இறை தரிசனம் நோக்கி ஒருவரின் வாழ்க்கை நகரவில்லையெனில் அவர் வாழ்வதும் ஒன்றுதான் வாழாத்தும் ஒன்றுதான்.

'தேடிச்சொறு நிதம் தின்று பல சின்னஞ்சிறு கதைகள் பேசி' என்கிற வெகு ஜன ஆட்களாகத்தான் அவர்கள் வபாழ்க்கை முடிந்து போகும். எவரேனும் எங்கேனும் தெளிவு பெறுவதற்கு இந்தப் புத்தகம் வழி காட்டும் என்ற நம்பிக்கையோடு இதை எழுதியிருக்கிறேன்.

- பாலகுமாரன்