-
தமிழின் நவீன இலக்கிய எழுத்தாளர்களில் குறிப்பிடத்தக்கவர் எஸ்.ராமகிருஷ்ணன். இவரது துணையெழுத்து, ஆனந்த விகடனில் தொடராக வெளிவந்து, வாசகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றதை அறிவீர்கள். மலையேறி தேனெடுப்பதைப் போல, இவரது எழுத்து தேடுதலும் சுவாரஸ்யமும் நிறைந்த ஓர் அனுபவம். ஜனநெருக்கடி மிகுந்த மின்சார ரயிலில், ஒரு சிறுவன் புல்லாங்குழல் வாசித்துக்கொண்டு போவதைப் போல, தீராத வார்த்தைகளால் இதயத்தை வருடிக்கொண்டே பயணமாகிக் கொண்டிருக்கிறார். இவருடைய பயணத்தில் நம்மையும் சக பயணியாகச் சேர்த்துக் கொண்டிருக்கிறார். பயணம் முழுக்க இவர் காட்டுகிற நிகழ்ச்சிகள், பாத்திரங்கள், சொற்கள் எல்லாமே காலத்தால் அழியாத ஜீவிதம் மிக்கவை. மனதை மெல்லிய இறகாக்கி, பேரன்பில் மலர்த்தி வைப்பவை.
வாழ்க்கை எவ்வளவு விசித்திரமான முடிச்சுகளைக் கொண்டிருக்கிறது... மனிதர்கள் எத்தனை விதமான மனோபாவம் கொண்டவர்கள்... ஒரு கணம் மகிழ்ச்சியாகவும், மறுகணம் துயரமாகவும் மாறும் மனம்தான் எவ்வளவு ஆச்சரியமானது... இதுபோன்ற எண்ணற்ற எண்ணங்களை நமக்குள் எழுப்புகின்ற இந்தக் கட்டுரைகள் அனைத்தும், நம் நினைவில் நிழலாடிக் கொண்டே இருக்கும்.
இவர் வெயில் பற்றி எழுதும்போது ஒரு துண்டு சூரியன், மழை பற்றி எழுதும்போது ஒரு கை மேகம், காதல் பற்றி எழுதும்போது ஒரு ரோஜா இதழ்... பிரிவு பற்றி எழுதும்போது ஒரு கண்ணீர்த் துளி... நம்மை வந்து அடைகின்றன. அது அத்தனையையும் நீங்கள் மொத்தமாக அள்ளிக்கொள்ளவே, 'துணையெழுத்து' இப்போது ஒரு முழுத் தொகுப்பாக வெளிவருகிறது.
இதைப் புத்தகமாகக் கொண்டு வருவதில் நான் பெருமகிழ்ச்சியும் பெருமையும் அடைகிறேன்.
-
This book Thunaieluthu is written by S. Ramakrishnan and published by Vikatan Prasuram.
இந்த நூல் துணையெழுத்து, எஸ். ராமகிருஷ்ணன் அவர்களால் எழுதி விகடன் பிரசுரம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.
Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Thunaieluthu, துணையெழுத்து, எஸ். ராமகிருஷ்ணன், S. Ramakrishnan, Ilakiyam, இலக்கியம் , S. Ramakrishnan Ilakiyam,எஸ். ராமகிருஷ்ணன் இலக்கியம்,விகடன் பிரசுரம், Vikatan Prasuram, buy S. Ramakrishnan books, buy Vikatan Prasuram books online, buy Thunaieluthu tamil book.
|