book

இளைய தலைமுறைக்கு

Ilaya Thalaimuraikku

₹40+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :டாக்டர்.இல.செ. கந்தசாமி
பதிப்பகம் :தன்னம்பிக்கை மாத இதழ்
Publisher :Thannambikai maatha ithal
புத்தக வகை :சுய முன்னேற்றம்
பக்கங்கள் :101
பதிப்பு :1
Published on :2007
குறிச்சொற்கள் :வெற்றி, முயற்சி, திட்டம், நேரம்
Out of Stock
Add to Alert List

எழுத்துக்கள் - நம்பிக்கைகளிலிருந்து, அனுபவத்திலிருந்து, தனியாத ஆர்வத்திலிருந்து பிறக்க வேண்டும். அப்படிப் பிறக்கும் போதுதான் அதிலே உண்மை இருக்கும்; ஜீவன் இருக்கும். ஒரு எழுத்தாளன் தான் சொல்வதைத் தன் வாழ்வில் நடந்து காட்டுபவனாக இருக்க வேண்டும். பேராசிரியர் கந்தசாமியை நான் நன்கு அறிவேன். இனிமை, தெளிவு, துணிவு, என்பவற்றிற்கு ஒரு உருவம் கொடுக்க முடியுமானால் அது சுருட்டைத் தலை முடியுடன், சிரித்த முகத்துடன், வீரம் திகழும் மீசையுடன் சுமார் ஐந்தடி ஆறங்குலத்திற்குத் தூய்மையான உடையில் கந்தசாமியாக திகழும். இந்த நாடு உண்மையான எழுத்தாளர்களை, சிந்தனையாளர்களை நாடுகிறது. ஆகவே பேராசிரியர் கந்தசாமியைப் பற்றி அறியாதர்களுக்கெல்லாம் நான் சொல்ல விரும்புவது இதோ எழுத்தாளர், சிந்தனையாளர்; படியுங்கள், சிந்தியுங்கள்! பயன்பெறுங்கள்!! என்பதுதான். - டாக்டர் எம்.எஸ். உதயமூர்த்தி