book

27 இந்திய சித்தர்கள்

27 India Sithargal

₹145+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :எஸ். ராம்குமார்
பதிப்பகம் :விகடன் பிரசுரம்
Publisher :Vikatan Prasuram
புத்தக வகை :சித்தர்கள்
பக்கங்கள் :144
பதிப்பு :11
Published on :2016
ISBN :9788184762839
குறிச்சொற்கள் :தெய்வம், கடவுள், கோயில்கள், வழிப்பாடு, பொக்கிஷம், புராணம், பழங்கதைகள்
Add to Cart

சித்தர்கள் - ஒரு பார்வை!

'மனத்தூய்மையை மலிவான விலைக்கு விற்று, புறத்தூய்மையை மட்டும் பொலிவுடன் வைத்துக்கொள்ளும் வாழ்க்கை தேவையா?' என தனக்குத் தானே கேட்டுக்கொண்டு தெளிவடையும் பக்குவம் மனிதனுக்கு அவசியம்.

அறத்தோடு வாழும் கலையை எளிய பாடல்களில் விளக்கி, பிறரின் நலன்களை மட்டுமே மனதில் வைத்து சேவை செய்த மகான்களைத்தான் நாம்சித்தர்கள் என்று குறிப்பிடுகிறோம்.

அகத்தியர், போகர், திருமூலர், இடைக்காடர், கருவூரார், சிவ்வாக்கியர், அழுகணி, பட்டினத்தார்... என சித்தர்கள் பலரின் பிறப்பு ரகசியத்தை விளக்கிச்சொல்கிறது இந்த நூல்.

சாமான்ய மனிதர்கள் எப்படி சித்தர்களானார்கள்? அவர்களுக்குரிய அடையாளங்கள் என்ன?  அவர்களின் வாழ்க்கை நெறி விளக்கும் ரகசியம் என்ன?  சித்தர்களைப் பற்றிய வரலாற்றுப் பதிவுகள் ஏன் இருட்டடிப்பு செய்யப்பட்டன?  சித்தர்களை போதைப் பிரியர்கள் என்று கூறுவது உண்மையா?  என்பது போன்ற வினாக்களுக்கு விடையளிக்கிறது இந்த நூல்.

24 இந்திய சித்தர்களின் வாழ்க்கையை முத்திரைப் பதிவுகளாக, எளிமையான நடையில் தொகுத்து எழுதியுள்ளார் நூலாசிரியர் எஸ். ராஜகுமாரன்.

சித்தர்கள் பற்றிய பிம்பங்களை உள்வாங்கி, தன்னுடைய கற்பனைத் தூரிகையில் சித்தர்களுக்கு உயிரூட்டியிருக்கிறார் ஓவியர் எம்.ஆர். சதாசிவம்.

சித்தர்களின் சீர்மிகு வரலாற்றை அறிவதோடு, அவர்களின் சித்து விளையாட்டுகளால் மக்கள் அடைந்த நன்மை என்ன என்பதை நீங்களும் அறிந்து, தெரிந்து, தெளிவு பெற, இந்த நூல் உங்களுக்கு நிச்சயம் துணைபுரியும்.

-ஆசிரியர்.